அழகு நிலைய பெண் ஊழியர் கொலை? மோட்டார் சைக்கிளில் தப்பிய மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு
ஆத்தூர் அருகே அழகு நிலைய பெண் ஊழியர் கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், சம்பவ இடத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிய மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஆத்தூர்,
ஆத்தூர் அருகே உள்ள மல்லியக்கரை போலீஸ் சரகம் ஊராண்டி வலசு கிராமத்தை சேர்ந்தவர் குப்புசாமி, லாரி டிரைவர். இவருடைய மனைவி சசிரேகா. இவர்களுடைய மகள் கவுசிகா (வயது 23). இவருக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் தாலுகா தகர கல்லாநத்தம் பகுதியை சேர்ந்த சரவணன் என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
கவுசிகா தனது கணவர் மற்றும் 1¼ வயது பெண் குழந்தையுடன் திருப்பூர் பெரியார் நகர் பகுதியில் வசித்து வந்தார். அங்குள்ள அழகு நிலையம் ஒன்றில் ஊழியராக வேலை செய்து வந்தார். பின்னர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது தந்தை வீட்டுக்கு கடந்த 13-ந் தேதி கவுசிகா வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கவுசிகா வீட்டின் முன்பு மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து அவரது பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் மர்ம சாவு என்று வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.
சிறப்பு உடற்கூறு ஆய்வு
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கவுசிகாவின் உடலில் விஷம் மற்றும் தற்கொலைக்கான காரணங்கள் எதுவும் இல்லை என ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் நடந்த பிரேத பரிசோதனை அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து விசாரணைக்கு உதவிடும் வகையில், சிறப்பு உடற்கூறு ஆய்வுக்காக அவரது உடல் வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அங்கு உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு முடிவுகள் வந்தால் தான் அவர் எப்படி இறந்தார்? என்பது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
அதே நேரத்தில் கவுசிகா தற்கொலை செய்து கொள்ளாத பட்சத்தில், ஏதேனும் நோய் கொடுமையால் இறந்தாரா? அல்லது பலவந்தப்படுத்தி கற்பழிக்க முயன்று மர்ம நபரால் கொல்லப்பட்டாரா? என்று பல்வேறு கோணங்களில் மல்லியக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாஸ்கர பாபு மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மோட்டார் சைக்கிளில் தப்பியவர்
கவுசிகா இறப்பதற்கு முன்பு அவரது செல்போனுக்கு பல்வேறு அழைப்புகள் வந்துள்ளன. மேலும் அதில் வீடியோ கால் அழைப்பும் வந்துள்ளது. அவர் இறந்த சில மணிநேரத்தில் அப்பகுதியில் ஒரு நபர் மோட்டார் சைக்கிளை தள்ளிக்கொண்டு சென்று பின்னர் வண்டியை ஸ்டார்ட் செய்து அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார்.
எனவே அந்த மர்ம நபர் யார்? என்பது தொடர்பாகவும் அவருக்கும், கவுசிகா மரணத்துக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Related Tags :
Next Story