மாவட்ட செய்திகள்

கஞ்சா வேட்டையில் சிக்கிய பள்ளி, கல்லூரி மாணவர்கள் - போலீசார் எச்சரித்து அனுப்பினர் + "||" + Getting caught in the ganja hunt School and college students - police warned

கஞ்சா வேட்டையில் சிக்கிய பள்ளி, கல்லூரி மாணவர்கள் - போலீசார் எச்சரித்து அனுப்பினர்

கஞ்சா வேட்டையில் சிக்கிய பள்ளி, கல்லூரி மாணவர்கள் - போலீசார் எச்சரித்து அனுப்பினர்
பேட்டையில் கஞ்சா வேட்டையில் சிக்கிய பள்ளி, கல்லூரி மாணவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
பேட்டை, 

பேட்டை மைலப்பபுரத்தை சேர்ந்தவர் வெள்ளபாண்டி மகன் மணி (வயது 30). இவர் நரசிங்கநல்லூர் ரோட்டில் கஞ்சா விற்பனை செய்வதாக சுத்தமல்லி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சக்தி நடராஜன் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். போலீசாரை பார்த்ததும் மணி அங்கிருந்து தப்பி ஓடினார். அப்போது அவரிடம் இருந்த செல்போன் தவறி கீழே விழுந்து போலீசாரிடம் சிக்கியது. இதையடுத்து போலீசார் அந்த செல்போனை கைப்பற்றினர்.

பின்னர் அந்த எண்ணுக்கு வந்த அழைப்புகளை போலீசார் எடுத்து பேசினர். அப்போது ஏராளமானோர் கஞ்சா கேட்டனர். அதற்கு போலீசாரும் கஞ்சா வியாபாரி போன்று பேசி, கஞ்சா கேட்ட அனைவரையும் பல்வேறு இடங்களுக்கு வரவழைத்த னர். பின்னர் போலீசாரும் மாறுவேடத்தில் சென்று, கஞ்சா வாங்க வந்தவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் அனைவரும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் என்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து அவர்களின் பெற்றோரை வரவழைத்து பேசினர். இதுதொடர்பாக 25 மாணவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர். மணி மீது போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மணியை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ‘வாட்ஸ்அப்’ குழு அமைத்து போதை பொருள் விற்ற கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது
‘வாட்ஸ்-அப்’ குழு அமைத்து போதை பொருள் விற்ற கல்லூரி மாணவர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
2. சண்டிகாரில் பயங்கரம்: கல்லூரி மாணவர்கள் 2 பேர் சுட்டுக்கொலை
சண்டிகாரில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
3. கஞ்சா வேட்டையில் சிக்கினர்: பயங்கர ஆயுதங்களுடன் 4 பேர் கைது
கஞ்சா வேட்டையில் ஈடுபட்ட தனிப்படை போலீசார், பயங்கர ஆயுதங்கள் மற்றும் கஞ்சாவுடன் வீட்டில் பதுங்கி இருந்த 4 பேரை கைது செய்தனர்.
4. சென்னை புறநகர் பகுதிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களை சீரழிக்கும் கஞ்சா 5 பேர் கைது
சென்னை புறநகர் பகுதிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களை சீரழிக்கும் கஞ்சா விற்பனையாளர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்கும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். பல்லாவரத்தில் கஞ்சா விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
5. டெல்லி, கர்நாடகா, காஷ்மீரில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை
டெல்லி, கர்நாடகா, காஷ்மீரில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

அதிகம் வாசிக்கப்பட்டவை