குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்து திருச்சி பாலக்கரை பகுதி வியாபாரிகள் கடையடைப்பு
குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்து திருச்சி பாலக்கரை பகுதி வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி,
மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. பல்கலைக்கழக மாணவர்கள், கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சாலைமறியல், ஆர்ப்பாட்டம் என போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.
கடையடைப்பு
இந்த நிலையில் திருச்சி பாலக்கரை பகுதியில் பழைய இரும்புக்கடை, பழைய டயர் கடை, மோட்டார் வாகன உதிரி பாகங்கள் விற்பனை கடை, டீக்கடை உள்ளிட்ட பல்வேறு கடைகளை அடைத்து பழைய கார், மோட்டார் வாகன உதிரிபாக வியாபாரிகள் நலச்சங்கத்தினர், குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.
திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள என்.எம்.வீதி, காஜாகடை சந்து, மதுரை ரோடு, சப்-ஜெயில் ரோடு, எம்.கே.தெரு, அம்பர்ஷா பள்ளிவாசல் தெரு உள்ளிட்ட இடங்களில் உள்ள 500-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
இதுதொடர்பாக வியாபாரி அப்துல்கரீம் கூறியதாவது:-
ரூ.50 லட்சம் வர்த்தகம் பாதிப்பு
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்யக்கோரி அனைத்து சமுதாய வியாபாரிகள் ஒருங்கிணைந்து பாலக்கரை பகுதியில் 500-க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்திருக்கிறோம். இந்தியா மதசார்பற்ற நாடு. எனவே, இங்கு பாகுபாடுக்கே இடமில்லை. தங்களது ஒருநாள் வர்த்தகம் பாதிப்படைந்தாலும் பரவாயில்லை எனக்கருதி இரும்பு வியாபாரிகள், டயர் விற்பனையாளர்கள், பழைய மோட்டார், கார் உதிரிபாகங்கள் வியாபாரிகள், டீக்கடைகள் என அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளது. கடைகள் அடைப்பு காரணமாக ரூ.50 லட்சம் மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டு வியாபாரிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, மத்திய அரசு எங்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்பபெற வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Tags :
Next Story