மரக்காணம் அருகே விபத்து சாலையோர மரத்தில் கார் மோதல் எல்.ஐ.சி. அதிகாரிகள் 4 பேர் படுகாயம்


மரக்காணம் அருகே விபத்து சாலையோர மரத்தில் கார் மோதல் எல்.ஐ.சி. அதிகாரிகள் 4 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 19 Dec 2019 4:15 AM IST (Updated: 19 Dec 2019 3:38 AM IST)
t-max-icont-min-icon

மரக்காணம் அருகே சாலையோர மரத்தில் கார் மோதியதில் எல்.ஐ.சி. அதிகாரிகள் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

மரக்காணம்,

சென்னை வேளச்சேரியில் உள்ள எல்.ஐ.சி. அலுவலகத்தில் கிளை மேலாளராக பணியாற்றி வருபவர் சந்திரமோகன் (வயது 50). இவர், தன்னுடன் பணியாற்றும் உதவி மேலாளர் ஸ்ரீதர் (47), அலுவலர்கள் சுஜி (35), சங்கர் (37) ஆகியோருடன் நேற்று சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு புறப்பட்டார்.

கிழக்கு கடற்கரை சாலையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே சம்புவெளி என்ற இடத்தில் கார் வந்துகொண்டிருந்தது. அப்போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் உள்ள மரத்தில் வேகமாக மோதியது.

படுகாயம்

இதில் காரில் இருந்த சந்திரமோகன், ஸ்ரீதர் உள்பட 4 பேரும் படுகாயம் அடைந்தனர். காரின் முன்பகுதியும் சேதமடைந்தது.

இதுபற்றி தகவல் அறிந்து நெடுஞ்சாலை ரோந்து பிரிவு போலீசார் விரைந்து வந்து விபத்தில் காயமடைந்த 4 பேரையும் மீட்டனர். பின்னர் புதுவை அருகே கனகசெட்டிக்குளத்தில் உள்ள பிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

விபத்து தொடர்பாக மரக்காணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story