மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கக்கோரி என்.ஆர்.காங்.-அ.தி.மு.க.வினர் திடீர் மறியல்
மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கக்கோரி என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க.வினர் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
புதுச்சேரி,
புதுவையில் வடகிழக்கு பருவமழையினால் அனைத்து சாலைகளும் சேதமடைந்துள்ளன. முக்கியமான சாலைகளில் பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டு போக்குவரத்துக்கு உகந்ததாக இல்லை.
இந்த பள்ளங்களில் சிக்கி விபத்துக்குள்ளாகும் வாகன ஓட்டிகள் காயமடையும் நிலை இருந்து வருகிறது. மாநிலம் முழுவதும் இதேபோல் மோசமான நிலையில் சாலைகள் இருந்து வருகின்றன.
சாலைமறியல்
காமராஜ் நகர் தொகுதியில் சாலைகள் அனைத்தும் சேதமடைந்து கிடப்பதாகவும் அவற்றை சீரமைக்க கோரியும் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் அ.தி.மு.க.வினர் சாரம் பாலம் அருகில் நேற்று திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். என்.ஆர்.காங்கிரஸ் புவனேஸ்வரன், அ.தி.மு.க. துணை செயலாளர் கணேசன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். சிவாஜி மன்ற தலைவர் மாயன், பிள்ளைத்தோட்டம் சுகுமாறன் உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த மறியலால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்டவர்களுடன் கோரிமேடு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அதிகாரி உறுதி
இந்தநிலையில் பொதுப்பணித்துறை உதவிபொறியாளர் ஏழுமலை அங்கு வந்தார். சேதமடைந்த சாலைகள் உடனடியாக சரிசெய்து தரப்படும் என்று உறுதியளித்தார். அவரது உறுதிமொழியை தொடர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டவர்கள் அதை கைவிட்டு அமைதியாக கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story