தாராவி சீரமைப்பு திட்டத்தை விரைவில் தொடங்க வேண்டும் - முதல்-மந்திரியிடம் ராகுல்செவாலே எம்.பி. கோரிக்கை


தாராவி சீரமைப்பு திட்டத்தை விரைவில் தொடங்க வேண்டும் - முதல்-மந்திரியிடம் ராகுல்செவாலே எம்.பி. கோரிக்கை
x
தினத்தந்தி 20 Dec 2019 4:49 AM IST (Updated: 20 Dec 2019 4:49 AM IST)
t-max-icont-min-icon

தாராவி சீரமைப்பு திட்டத்தை விரைவில் தொடங்க வேண்டும் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயிடம் ராகுல் செவாலே எம்.பி. கோரிக்கைவிடுத்து உள்ளார்.

மும்பை, 

தாராவி சீரமைப்பு திட்டம் நீண்டகாலமாக நிறைவேற்றப்படாமல் உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தாராவி சீரமைப்பு திட்ட ஆணையம் மூலம் தாராவியில் சீரமைப்பு பணியை தொடங்க அரசு முழுவீச்சில் இறங்கியது. இந்த பணிகளுக்கான ஒப்பந்தமும் துபாய் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.

எனினும் அதில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இதனால் தாராவி சீரமைப்பு திட்டம் தொடங்கப்படாமல் உள்ளது. இந்தநிலையில் ராகுல் செவாலே எம்.பி. நாக்பூரில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயை சந்தித்து மனு அளித்தார்.

அதில், தாராவி சீரமைப்பு திட்டத்தை விரைவில் தொடங்க வேண்டும் என கோாிக்கை விடுத்து உள்ளார். மேலும் அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தாராவியில் உள்ள குடிசைகளை கணக்கெடுத்து அவர்களுக்கு உடனடியாக சீரமைப்பு திட்டத்தின்கீழ் வீடுகள் கட்டி கொடுக்கப்பட வேண்டும். மேலும் பழைய கட்டிடங்களை அதில் வசிக்கும் குடியிருப்புவாசிகளே சீரமைத்து கொள்ள அனுமதி வழங்க வேண்டும்.

குடிசைவாசிகள் தனியார் கட்டுமான அதிபர்கள் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி கொள்ள அனுமதிக்க வேண்டும். மக்கள் தொகைபெருக்கம் காரணமாக தாராவியில் நாளுக்கு நாள் சுகாதாரப்பிரச்சினைகள் அதிகரித்து கொண்டே செல்கிறது. எவ்வளவு முயற்சி செய்தாலும் அதை தீர்ப்பது மிகுந்த சவாலாக உள்ளது. எனவே தாராவி மக்களின் துயரத்தை துடைக்க முதல்-மந்திரி உடனடியாக நல்ல முடிவை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story