ராணிப்பேட்டை பெல் அருகே, வாகனம் மோதி தொழிலாளி சாவு


ராணிப்பேட்டை பெல் அருகே, வாகனம் மோதி தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 21 Dec 2019 3:15 AM IST (Updated: 20 Dec 2019 6:55 PM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டை பெல் அருகே, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

சிப்காட் (ராணிப்பேட்டை), 

ராணிப்பேட்டை பிஞ்சி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 54). இவர், ராணிப்பேட்டை பெல் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் வேலைக்கு சென்றுவிட்டு நேற்று அதிகாலையில் அக்ராவரம் நோக்கி வரும் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story