கோவையில் மொபட் மீது பஸ் மோதி கல்லூரி மாணவி தலை நசுங்கி சாவு - தாத்தா கண் எதிரே பரிதாபம்


கோவையில் மொபட் மீது பஸ் மோதி கல்லூரி மாணவி தலை நசுங்கி சாவு - தாத்தா கண் எதிரே பரிதாபம்
x
தினத்தந்தி 21 Dec 2019 4:30 AM IST (Updated: 21 Dec 2019 1:03 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் மொபட் மீது பஸ் மோதியதில் தாத்தாவின் கண் எதிரே கல்லூரி மாணவி தலை நசுங்கி பரிதாபமாக இறந்தார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

துடியலூர்,

கோவையை அடுத்த துடியலூர் செங்காளிபாளையத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 63). இவருடைய பேத்தி காவியாஸ்ரீ (வயது 20). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். பொன்னுசாமி, செங்காளிபாளையத்தில் இருந்து என்.ஜி.ஜி.ஓ. காலனி வழியாக துடியலூருக்கு பேத்தியை தினமும் மொபட்டில் அழைத்து சென்று இறக்கி விடுவது வழக்கம்.

அங்கிருந்து காவியாஸ்ரீ பஸ் மூலம் கல்லூரிக்கு செல்வார். நேற்று காலை பொன்னுசாமி மொபட்டில் தனது பேத்தி காவியாஸ்ரீயை ஏற்றிக் கொண்டு . என்.ஜி.ஜி.ஓ. காலனி பகுதியில் சென்று கொண்டு இருந் தார். அவர், முன்னால் சென்ற அரசு பஸ்சை முந்திச் செல்ல முயன்றதாக தெரிகிறது.

அப்போது எதிர்பாராதவிதமாக மொபட் மீது பஸ் மோதியது. இதில் பொன்னுசாமி சாலையில் வலதுபுறமாக விழுந்ததால் லேசான காயம் அடைந்தார். மொபட் பின்னால் உட்கார்ந்து இருந்த காவியாஸ்ரீ நிலை தடுமாறி சாலையில் இடதுபுறமாக கீழே விழுந்தார். அப்போது பஸ்சின் பின்பக்க சக்கரம் அவரது தலையில் ஏறி இறங்கியது. இதில் காவியாஸ்ரீயின் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதை அறிந்த துடியலூர் போலீசார் விரைந்து வந்து காவியாஸ்ரீயின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவர் பிரபாகரன் (48) என்பவரை கைது செய்தனர்.

தனது கண் முன்னே பேத்தி விபத்தில் இறந்ததை பார்த்து பொன்னுசாமி கதறி அழுதது காண்போரை கண் கலங்க செய்தது. இந்த விபத்து காரண மாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

Next Story