புத்தாண்டு தினத்தில் சர்ச்கேட்- விரார் இடையே 8 சிறப்பு மின்சார ரெயில்கள்


புத்தாண்டு தினத்தில் சர்ச்கேட்- விரார் இடையே 8 சிறப்பு மின்சார ரெயில்கள்
x
தினத்தந்தி 21 Dec 2019 5:10 AM IST (Updated: 21 Dec 2019 5:10 AM IST)
t-max-icont-min-icon

புத்தாண்டு தினத்தையொட்டி சர்ச்கேட்-விரார் இடையே 8 சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக மேற்கு ரெயில்வே தெரிவித்து உள்ளது.

மும்பை, 

2020 புத்தாண்டு பிறப்பையொட்டி வருகிற 31-ந்தேதி இரவு மும்பையில் கேட்வே ஆப் இந்தியாவில் புத்தாண்டை கொண்டாட அதிகளவில் மக்கள் திரளுவார்கள்.

இதேபோல மெரின்டிரைவ் உள்ளிட்ட கடற்கரைகளிலும் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டும்.

இதையொட்டி மேற்கு ரெயில்வே சர்ச்கேட்- விரார் இடையே 8 சிறப்பு மின்சார ரெயில் சேவைகளை இயக்குகிறது.

இதன்படி சர்ச்கேட்டில் இருந்து விராருக்கு 1-ந்தேதி அதிகாலை 1.15 மணி, 2 மணி, 2.30 மணி, 3.25 மணிக்கும், விராரில் இருந்து சர்ச்கேட்டிற்கு அதிகாலை 12.15 மணி, 12.45 மணி, 1.40 மணி, 3.05 மணிக்கும் இயக்கப்படுகிறது.

இந்த தகவல் மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story