தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி பெரம்பலூரில் முஸ்லிம்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி, பெரம்பலூரில் முஸ்லிம்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர்,
மத்திய அரசின் தேசிய குடியுரிமை திருத்த சட்டத்துக்கு தமிழகம் உள்பட நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பி உள்ளது. எதிர்க்கட்சிகள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்படுகிறது. மாணவர்கள் அமைப்பினரும் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்நிலையில் மத்திய அரசின் தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட ஜமாத்துல் உலமா சபை, அனைத்து மஹல்லா ஜமாத்துகள், முஸ்லிம் இயக்கங்கள் மற்றும் தோழமை கட்சிகள் ஒருங்கிணைந்து பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள காந்தி சிலை முன்பு நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தின. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பெரம்பலூர், அரியலூர் மாவட்ட ஜமாத்துல் உலமா சபையின் துணை தலைவர் இஹ்சனுல்லாஹ் தலைமை தாங்கினார். பெரம்பலூர், அரியலூர் மாவட்ட அனைத்து பள்ளி வாசல் நிர்வாகிகள், ஜமாத்தார்கள் முன்னிலை வகித்தனர்.
கோஷங்களை எழுப்பினர்
இதில் பெரம்பலூர் ஜமாத்துல் உலமா சபையை சேர்ந்த இப்ராஹிம் சாதிக், பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் குன்னம் ராஜேந்திரன், தி.மு.க. கொள்கை பரப்பு துணை செயலாளர் பெருநற்கிள்ளி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் அப்துல் ஹாதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் செல்லத்துரை, காங்கிரஸ் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட தலைவர் சுல்தான் மொய்தீன், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் மாவட்ட தலைவர் அபுபக்கர் சித்திக், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ஞானசேகரன், பெரியார் திராவிட கழக மாவட்ட தலைவர் தாமோதரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில இணை செயலாளர் முருகையன், மனிதநேய ஜனநாயக கட்சியின் செய்தி தொடர்பாளர் சாகுல் ஹமீது ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம்கள், சிறுபான்மையினர், ஈழத் தமிழர்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பப்பட்டது. இதில் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களை சேர்ந்த முஸ்லிம்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பாதுகாப்பு பணியில் பெரம்பலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு கிரிதர் தலைமையிலான போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
தேசிய கொடியுடன்...
தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி பெரம்பலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், ஏராளமானோர் இந்திய தேசிய கொடியுடன் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடையடைப்பு
பெரம்பலூரில் முஸ்லிம்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக லப்பைக்குடிகாடு, வி.களத்தூர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் முஸ்லிம்கள் தங்களது கடைகளை அடைத்து விட்டு வந்தனர். இதனால் அந்த பகுதிகளில் உள்ள கடைவீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

Related Tags :
Next Story