விவசாயிகள் நலன்காக்கும் நாள் கூட்டம்


விவசாயிகள் நலன்காக்கும் நாள் கூட்டம்
x
தினத்தந்தி 22 Dec 2019 3:30 AM IST (Updated: 21 Dec 2019 11:10 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் கலெக்டர் பொன்னையா தலைமையில் நடைபெற்றது.

காஞ்சீபுரம்,

விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம். இந்த கூட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து 51 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். ஏரி, கால்வாய்களில் தூர் வார ஆவன செய்ய வேண்டும், விவசாய நிலங்களில் பன்றிகள் நாசம் செய்கிறது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு விவசாயிகள் கூறினர். மாட்டு வண்டியில் மணல் எடுக்க அனுமதிக்க வேண்டும், நேரடி கொள்முதல் நிலையம் அமைத்து தர விவசாயிகள் கோரிக்கை விடுத்தார்கள். ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் உள்ள பெரிய ஏரியின் மதகு, தாங்கல், கலங்கல் சீரமைக்க ஆவன செய்ய கோரிக்கை விடுத்தனர். மேலும் காஞ்சீபுரம் வேளாண்மைதுறையின் சார்பில் நடத்தப்பட்ட இடுபொருள் விற்பனையாளர்களுக்கு வேளாண்மை விரிவாக்க சேவைக்கான பட்டப்படிப்பு சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் பொன்னையா வழங்கினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி சுந்தரமூர்த்தி, இணை இயக்குனர் (வேளாண்மை) அசோகன், செயற்பொறியாளர் (பொதுப்பணித் துறை நீர் வள ஆதாரம்) தியாகராஜன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) துணை இயக்குனர் சுகுமார், அரசு அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.

Next Story