குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம்: பிரின்ஸ் எம்.எல்.ஏ. உள்பட 600 பேர் மீது வழக்கு


குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம்: பிரின்ஸ் எம்.எல்.ஏ. உள்பட 600 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 21 Dec 2019 10:15 PM GMT (Updated: 21 Dec 2019 8:21 PM GMT)

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து குளச்சலில் போராட்டம் நடத்தியதாக பிரின்ஸ் எம்.எல்.ஏ. உள்பட 600 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

குளச்சல்,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.

நேற்றுமுன்தினம் குளச்சலில் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதனையும் மீறி போராட்டம் நடத்தப்பட்டது.

600 பேர் மீது வழக்கு

இந்தநிலையில் போராட்டத்தில் ஈடுபட்டதாக பிரின்ஸ் எம்.எல்.ஏ., குளச்சல் ஜூம்மா பள்ளி ஜமாத் தலைவர் பஷீர் கோயா, துணை தலைவர் அமிதுல் அக்பர், செயலாளர் ஜலாலுதீன், இணை செயலாளர்கள் ஜலாலுதீன், அப்துல் ரஹ்மான், பொருளாளர் அமீர் அலி உள்பட 600 பேர் மீது 2 பிரிவுகளின் கீழ் குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Next Story