குடியுரிமை திருத்த சட்டம் சிறுபான்மையினர் ஓட்டுக்களை பெற எதிர்கட்சிகள் வதந்தியை பரப்புகிறார்கள் இல.கணேசன் பேட்டி
குடியுரிமை திருத்த சட்டத்தில் சிறுபான்மையினர் ஓட்டுக்களை பெற எதிர்க்கட்சிகள் வதந்தியை பரப்புகிறார்கள் என இல.கணேசன் கூறினார்.
புதுச்சேரி,
புதுச்சேரியில் பொற்றாமரை கலை இலக்கிய அரங்கம் ரங்கபிள்ளை வீதியில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினரும், பொற்றாமரை கலை இலக்கிய அரங்க தலைவருமான இல.கணேசன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சங்கரன், பொருளாளர் கோபாலன், ஆலோசகர் சந்திரா கோபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் ரங்கராஜ் பாண்டே கலந்துகொண்டு குடியுரிமை திருத்த சட்டம் குறித்து பேசினார். உலக தமிழ் ஆராய்ச்சி மைய செயலர் உலகநாயகி பழனி கலந்துகொண்டு பேசினார்.
சிறுபான்மையினர் ஓட்டு...
நிகழ்ச்சி முடிந்தவுடன் இல.கணேசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டம் பற்றி மக்கள் மத்தியில் தவறான கருத்து பரப்பப்பட்டுள்ளது. பிரிவினை காலத்தில் அடித்து விரட்டப்பட்ட 36 ஆயிரம் பேருக்கு குடியுரிமை வழங்கப்படாமல் இருக்கிறது. குடியுரிமை திருத்த சட்டம் மூலமாக இம்மாத இறுதிக்குள் அவர்களை இந்திய குடிமக்களாக சேர்க்க வேண்டும். பாரதீய ஜனதா கட்சி சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என பொய் பிரசாரம் செய்து வருகிறார்கள். நாங்கள் பேதம் பார்ப்பதில்லை. சிறுபான்மையினரின் ஓட்டுக்களை பெறுவதற்காக எதிர்க்கட்சிகள் இந்த சட்டம் குறித்து வதந்தி பரப்புகிறார்கள். ஓட்டு நன்மையை விட நாட்டு நன்மை முக்கியம் என கருதுங்கள் என பிற கட்சிகளுக்கு வேண்டுகோள் வைக்கிறேன். தமிழக உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுடன், பாரதீய ஜனதா கட்சி கூட்டணி வைத்து போட்டியிடுகிறது. இதுதொடர்பாக மாவட்ட அளவில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வேட்பாளர்களை நிறுத்தி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக தேசிய விருது பெற்ற எஸ்.ஜெ.ஜனனி குழுவினரின் இசை நிகழ்ச்சி நடந்தது. விழாவுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீகாந்த், வி.சி.சி. நாகராஜன், வக்கீல் அசோக் பாபு, டாக்டர் ஜெயலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர். விழாவில் தமிழறிஞர்கள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் பா.ஜனதா கட்சியின் புதுவை மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. நன்றி கூறினார்.

Related Tags :
Next Story