குப்பை தொட்டியில் டம்ளர்களை கழுவிய ரெயில்வே கேண்டீன் ஒப்பந்ததாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம்


குப்பை தொட்டியில் டம்ளர்களை கழுவிய ரெயில்வே கேண்டீன் ஒப்பந்ததாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம்
x
தினத்தந்தி 21 Dec 2019 11:44 PM GMT (Updated: 21 Dec 2019 11:44 PM GMT)

குப்பை தொட்டியில் டம்ளர்களை கழுவிய ரெயில்வே கேண்டீன் ஒப்பந்ததாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து மத்திய ரெயில்வே நடவடிக்கை எடுத்து உள்ளது.

மும்பை, 

தானே டோம்பிவிலியை சேர்ந்தவர் அபியன்கர். இவர் நேற்று முன்தினம் அவரது டுவிட்டர் கணக்கில் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார். அந்த வீடியோவில் தானே ரெயில் நிலையத்தில் ஒருவர் ‘டீ' டம்ளர்களை குப்பை தொட்டியில் தண்ணீரை நிரப்பி சுத்தம் செய்யும் காட்சிகள் இடம்பெற்று இருந்தன.

அந்த வீடியோவை அபியன்கர் ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் மற்றும் மத்திய ரெயில்வேக்கும் டேக் செய்து இருந்தார்.

இந்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்ட சில மணி நேரங்களில் அதுகுறித்து விசாரணை நடத்த மத்திய ரெயில்வே மும்பை கோட்ட மூத்த வணிக மேலாளர் ரோபின் காலியா உத்தரவிட்டார்.

அப்போது தானே ரெயில் நிலையத்தில் உள்ள ரெயில்வே கேண்டீன் ஊழியர் டம்ளர்களை குப்பை தொட்டியில் தண்ணீரை நிரப்பி கழுவியது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து மத்திய ரெயில்வே, அந்த கேண்டீன் ஒப்பந்ததாரரான குப்தா சகோதரர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டது. இந்த சம்பவம் குறித்து கோட்ட வணிக மேலாளர் எம்.எல். மீனா கூறுகையில், ‘‘இதுபோன்ற செயல்கள் மிகப்பெரிய குற்றங்களாக பார்க்கப்படும். தேவைப்பட்டால் ஒப்பந்ததாரரின் கேண்டீன் உரிமம் ரத்து செய்யப்படும்’’ என எச்சரிக்கை விடுத்தார்.

Next Story