கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்
கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தற்காலிக ஊழியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தர்மபுரியில் நடந்த கூட்டுறவு சிக்கன நாணய சங்க ஊழியர்கள் கூட்டமைப்பு மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தர்மபுரி,
தமிழ்நாடு மாநில பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்க ஊழியர்கள் கூட்டமைப்பு மாநில பொதுக்குழு கூட்டம் தர்மபுரி பி.பி.சி. திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் பத்மராஜ் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் சம்பத், மாநில பொருளாளர் பட்டாபிராமன் ஆகியோர் அறிக்கை வாசித்தனர். மாவட்ட தலைவர் அம்மாசி வரவேற்று பேசினார்.
கூட்டமைப்பின் நிறுவனர் அந்தோணி முத்து சேவியர் கலந்து கொண்டு சங்க கொடியை ஏற்றி வைத்து தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினார். மாநில துணை பொதுச்செயலாளர் சந்தனராஜ், மாநில அமைப்பு செயலாளர் மகாலிங்கம் ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினர். கூட்டுறவு சங்கங்களில் பணிபுரிந்து வரும் தற்காலிக ஊழியர்கள் அனைவரையும் எந்த வித நிபந்தனையும் இன்றி தொழிலாளர் நல சட்டங்கள் மூலமாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு ஓய்வூதிய திட்டம் நடைமுறை படுத்த வேண்டும்.
நல நிதிக்கு ஒதுக்கீடு
நலிவுற்ற சங்க பணியாளர்கள் மற்றும் மிகைப்பணியாளர்கள் பணி பரவல் முறையில் மற்ற சங்கங்களில் தொடர்ந்து பணியாற்ற உடனடியாக அனுமதி வழங்க வேண்டும். சங்க லாபத்தில் 10 சதவீத தொகையை பணியாளர் நல நிதிக்கு ஒதுக்கீடு செய்ய அனுமதி வழங்க வேண்டும். கூட்டுறவு சங்கங்களை கணினி மயமாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாநில பிரசார செயலாளர் பரமாத்மா, மாநில தலைமை நிலைய செயலாளர் பத்மநாபன், மாநில தணிக்கையாளர் ராஜகோபால், மாநில மகளிர் அணி செயலாளர் ரமாபார்வதி மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர். முடிவில் தர்மபுரி மாவட்ட செயலாளர் கண்ணியப்பன் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story