கிறிஸ்துமஸ் பண்டிகை ‘களை’ கட்டியது: கடை வீதிகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்
குமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை களை கட்டியதை தொடர்ந்து கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
நாகர்கோவில்,
உலகம் முழுவதும் நாளை மறுநாள் (புதன்கிழமை) கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன. இதே போல குமரி மாவட்டத்திலும் கிறிஸ்துமஸ் பண்டிகை களை கட்டி இருக்கிறது. கிறிஸ்தவர்கள் தங்களது வீடுகளில் குடில் அமைத்தும், ஸ்டார் தொங்க விட்டும் கிறிஸ்துமஸை வரவேற்று உள்ளனர். கிறிஸ்து பிறப்பை வெளிப்படுத்தும் கேரல் பாடல் குழுவினர் வீதி வீதியாக சென்று பாடல் பாடி வருகிறார்கள். கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்தும் வலம் வருகிறார்கள்.
மேலும் ஒவ்வொரு கிறிஸ்தவ ஆலயங்களும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கின்றன. கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று புத்தாடை அணிவதும், கேக் மற்றும் இனிப்புகளை ஒருவருக்கு ஒருவர் பரிமாறி அன்பை வெளிப்படுத்துவதும் வழக்கம். எனவே புதிய துணிகள் மற்றும் கேக் வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதனால் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
மக்கள் கூட்டம்
நாகர்கோவிலில் செம்மாங்குடி ரோடு, கலெக்டர் அலுவலக சந்திப்பு, மணிமேடை, அவ்வை சண்முகம் சாலை, கேப் ரோடு உள்ளிட்ட இடங்களில் நேற்று மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அதிலும் மாலையில் நடந்து செல்ல முடியாதபடி கூட்டம் காணப்பட்டது. மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்து மக்கள் புதுத்துணி மற்றும் கேக் வாங்க நாகர்கோவில் வருவதால் நகர் முழுவதும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
மக்கள் கூட்டத்தை பயன்படுத்தி ஏதேனும் திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. நாகர்கோவில், மார்த்தாண்டம் உள்ளிட்ட வர்த்தக நகரங்களில் கூடுதல் போலீசார் பணியில் ஈடுபட்டு உள்ளனர். கடை வீதிகள் மற்றும் மக்கள் நடமாட்டம் நிறைந்த இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

Related Tags :
Next Story