பூண்டி ஏரி தண்ணீர் மாசு அடையாமல் தடுக்க: கிருஷ்ணா நதி கால்வாயில் இரும்பு வேலிகள் அமைக்கப்படும் - பொதுப்பணித்துறை அதிகாரி தகவல்
கண்டலேறு அணையிலிருந்து வரும் கிருஷ்ணா நதி நீரில் அடித்து வரப்படும் கழிவுகள் மூலம் பூண்டி ஏரி தண்ணீீர் மாசு அடையாமல் தடுக்க கிருஷ்ணா நதி கால்வாயில் இரும்பு வேலிகள் அமைக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரி தெரிவித்தார்.
ஊத்துக்கோட்டை,
சென்னை நகர மக்களின் குடிநீர் தேவை நிறைவேற்றும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி. இந்த ஏரியின் உயரம் 35 அடி. இதில், 3,231 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம்.
ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது, புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிக்கும், சென்னை குடிநீர் வாரியத்துக்கு தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.
கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர அரசு ஆண்டு தோறும் 12 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்துக்கு வழங்க வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி. தண்ணீர், ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. ஆக மொத்தம் 12 டி.எம்.சி. தண்ணீரை கண்டலேறு அணையிலிருந்த பூண்டி ஏரிக்கு திறந்து விட வேண்டும்.
அதன்படி செப்டம்பர் 28-ந் தேதி முதல் கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. செப்டம்பர் மாதம் 28-ந் தேதி முதல் நேற்று காலை வரை 3.608 டி.எம்.சி. தண்ணீர் வந்து சேர்ந்துள்ளது.
இந்நிலையில் பொதுப்பணித்துறை சென்னை மண்டல தலைமை பொறியாளர் அசோகன் நேற்று பூண்டி ஏரியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் கிருஷ்ணா நதி நீர் பூண்டி ஏரியில் கலக்கும் இடத்தை பார்வையிட்டார்.
அப்போது அவர் பேசும்போது, கண்டலேறு அணையிலிருந்து செப்டம்பர் 25-ந் தேதி திறந்து விடப்பட்ட தண்ணீர் பூண்டிக்கு 28-ந் தேதி வந்து சேர்ந்தது. இதனால் பூண்டி ஏரியின் நீர் மட்டம் கிடுகிடு என்று உயர்ந்து வருவது மகிழ்ச்சி தரும் விஷயமாகும். மேலும் கண்டலேறு அணையிலிருந்து 177 கிலோ மீட்டர் தூரத்தில் பூண்டி ஏரி உள்ளது.
இதனால் கண்டலேறு அணையிலிருந்து பாய்ந்து வரும் கிருஷ்ணா நதி நீரில் அடித்து வரும் கழிவுகள் பூண்டி ஏரியில் கலக்காமல் தடுக்க இரும்பு வேலிகள் அமைக்க திட்டமிட்டுள்ளோம். இதனால் பூண்டி ஏரியில் உள்ள தண்ணீர் மாசு அடையாமல் தடுக்கலாம் என்று தெரிவித்தார்.
அப்போது, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பொதுப்பணித்திலகம், உதவி பொறியாளர் ரமேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story