வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: 11 சட்டமன்ற தொகுதிகளில் 29 லட்சத்து 7 ஆயிரம் வாக்காளர்கள் கலெக்டர் தகவல்

சேலம் மாவட்டத்தில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 29 லட்சத்து 7 ஆயிரத்து 849 வாக்காளர்கள் உள்ளதாக கலெக்டர் ராமன் தெரிவித்தார்.
சேலம்,
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று 11 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான ராமன் வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மாவட்டத்தில் வெளியிடப்பட்டுள்ள 11 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலில் ஆண்கள் 14 லட்சத்து 53 ஆயிரத்து 675 பேரும், பெண்கள் 14 லட்சத்து 54 ஆயிரத்து 36 பேரும், இதரர் 138 பேர் என மொத்தம் 29 லட்சத்து 7 ஆயிரத்து 849 பேர் இடம்பெற்று உள்ளனர். கடந்த மார்ச் மாதத்திற்கு பிறகு புதிதாக 13 ஆயிரத்து 252 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தப்பணிகளுக்கான படிவங்கள் நேற்று முதல் அடுத்த மாதம் (ஜனவரி) 22-ந் தேதி வரை வழங்கப்படுகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு, அந்தந்த வாக்குப்பதிவு மையங்கள், தாசில்தார் அலுவலகங்கள், நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்கள், உதவி கலெக்டர் அலுவலகங்களில் விண்ணப்பப்படிவங்களை பெற்று பூர்த்தி செய்து தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். இணையதளம் மூலமும் (www.nvsp.in), கைபேசி செயலி (voter helpline) மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
பொதுமக்கள் பார்வை
அனைத்து வாக்குச்சாவடி மையங்கள், வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகம் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வரைவு வாக்காளர் பட்டியல் வைக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் தங்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்று உள்ளதா? என பார்த்து அறிந்து கொள்ளலாம். மேலும் வருகிற 1-ந் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணி இன்று (நேற்று) முதல் நடைபெற உள்ளது.
1.1.2020 அன்று 18 வயது பூர்த்தி அடையும் நபர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள், ஏற்கனவே உள்ள சட்டமன்ற தொகுதியில் இருந்து வேறு தொகுதிக்கு குடிபெயர்ந்தவர்கள் ஆகியோர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு படிவம் 6, பெயர் நீக்கம் செய்வதற்கு படிவம் 7, பெயர் மற்றும் முகவரி திருத்தங்கள் மேற்கொள்வதற்கு படிவம் 8 மற்றும் குறிப்பிட்ட சட்டமன்ற தொகுதியின் ஒரு பகுதியில் இருந்து வேறு பகுதிக்கு குடிபெயர்ந்தவர்கள் முகவரி மாற்றம் செய்ய படிவம் 8-ஏ ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும்.
சிறப்பு முகாம்கள்
இதுமட்டுமின்றிவாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டோர் மற்றும் 18 வயது நிறைவடைந்தவர்கள் விண்ணப்பிக்கும் வகையில் அடுத்த மாதம் (ஜனவரி) 4-ந் தேதி மற்றும் 5-ந் தேதி, 11 மற்றும் 12-ந் தேதிகளில் அனைத்து வாக்குப்பதிவு மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்படும். 22-ந் தேதி வரை பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகிற பிப்ரவரி மாதம் 14-ந் தேதி அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் சதீஷ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் தியாகராஜன், உதவி கலெக்டர் மாறன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story