பூதலூர் ஒன்றியத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்கு பெட்டிகள் தயார்


பூதலூர் ஒன்றியத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்கு பெட்டிகள் தயார்
x
தினத்தந்தி 24 Dec 2019 4:30 AM IST (Updated: 24 Dec 2019 2:53 AM IST)
t-max-icont-min-icon

பூதலூர் ஒன்றியத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்கு பெட்டிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

திருக்காட்டுப்பள்ளி,

தஞ்சை மாவட்டம் பூதலூர் ஒன்றியத்தில் ஒரு மாவட்ட ஊராட்சி உறுப்பினர், 16 ஒன்றியக்குழு உறுப்பினர், 42 ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர் பொறுப்புகளுக்கு வருகிற 27-ந் தேதி உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது.

உள்ளாட்சி தேர்தலுக்காக பூதலூர் ஒன்றியத்தில் புதுக்குடி தொடங்கி கல்லணை வரை 168 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் பயன்படுத்த உள்ள வாக்கு பெட்டிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

ஆய்வு

முன்னதாக வாக்கு பெட்டிகளுக்கு வண்ணம் பூசி, பெட்டியை திறக்கவும், மூடவும் எளிதாக உள்ளதா? என சரிபார்க்கும் பணிகள் ஒன்றிய அலுவலகத்தில் நடந்தன. இந்த பணிகளை ஒன்றிய ஆணையர் கோபாலகிரு‌‌ஷ்ணன் மற்றும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் 26-ந் தேதி தேவையான வாக்கு சீட்டுகள், வாக்கு பெட்டிகள் மற்றும் பதிவேடுகள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story