பாதாள சாக்கடை பணி முடிந்தும் தார் சாலை அமைக்காத அவலம் சேதமடைந்த சாலைகளால் தஞ்சை மக்கள் அவதி
பாதாள சாக்கடை பணி முடிந்தும் தார் சாலை போடாததால் சேதமடைந்து காணப்படும் சாலைகளால் தஞ்சை மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
தஞ்சாவூர்,
தஞ்சை மாநகராட்சியில் மொத்தம் 51 வார்டுகள் உள்ளன. மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக பள்ளியக்ரஹாரம், வடக்கு வாசல், மாரிக்குளம் பகுதியில் கழிவுநீர் நீரேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தந்த வார்டுகளில் இருந்து கழிவுநீர் சேகரிக்கப்பட்டு சமுத்திரம் ஏரி பகுதியில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்பப்படுகிறது. அங்கு கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு பாசனத்துக்கு விடப்படுகிறது.
தஞ்சை மாநகரில் விடுப்பட்ட பகுதிகளிலும், விரிவாக்கப்பகுதிகளிலும் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்படி பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விடுப்பட்ட பகுதிகளான தஞ்சை எம்.கே.மூப்பனார் சாலையில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக 3 குழிகள் தோண்டப்பட்டன. சிமெண்டு, செங்கற்களால் தொட்டி கட்டப்பட்டு, மூடியும் அமைக்கப்பட்டுள்ளது. தொட்டியை சுற்றியிருந்த பள்ளத்தில் மண் கொட்டப்பட்டது.
சிரமம்
தஞ்சையில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் மண் உள்வாங்கி, பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இரவு நேரங்களில் பள்ளம் இருப்பது தெரியாமல் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் கீழே தவறி விழக்கூடிய சம்பவம் அடிக்கடி நடக்கிறது. இந்த சாலையில் பள்ளிக்கூடம் உள்ளது. பள்ளிக்கு ஏராளமான மாணவ, மாணவிகள் ஆட்டோ, இருசக்கர வாகனங்களில் வந்து செல்கின்றனர்.
சிறுவர்களை அழைத்து கொண்டு ஸ்கூட்டரில் வரும் பெண்கள் பள்ளத்தில் சிக்கி அவதிப்படும் சூழ்நிலை உள்ளது. இதேபால் தஞ்சை கீழவாசல் எஸ்.என்.எம். ரகுமான் நகரில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக குழிகள் தோண்டப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. ஆனால் புதிதாக தார்சாலை போடப்படவில்லை. இதனால் குண்டும், குழியுமாக காணப்படுகிறது.
சேறும், சகதி
இருசக்கர வாகனங்கள் அந்த வழியாக செல்ல முடியாத அளவுக்கு மிகவும் மோசமாக காட்சி அளிக்கிறது. மழைநேரத்தில் மக்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு சேறும், சகதியுமாக காணப்படுகிறது. வேறு வழியில்லாததால் பள்ளி மாணவர்களை சேற்றில் நடந்து தான் பள்ளிக்கு பெற்றோர் அழைத்து செல்லும் நிலை உள்ளது.
இதேபோல் தஞ்சை ராஜீவ் நகர், ராஜீவ் நகர் வடக்கு தெரு, சோழன் நகர், தொல்காப்பியர் சதுக்கம் போன்ற பகுதிகளிலும் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. கேபிள் வயர் பூமியில் புதைப்பதற்காக சாலையோரங்களில் குழி தோண்டப்படுகிறது. வயரை புதைத்தவுடன் குழியை மூடிவிட்டு செல்கின்றனர். அந்த இடத்தில் புதிதாக சாலை போடாததால் வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் அவதிப்படும் நிலை உள்ளது.
எதிர்பார்ப்பு
ஏற்கனவே சாலைகள் மோசமாக இருக்கும் நிலையில் இப்படி குழிகளும் தோண்டப்படுவதால் மிக மோசமாக காட்சி அளிக்கிறது. மோசமாக காணப்படும் சாலைகளில் புதிதாக தார் சாலை போட வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மக்கள் நலனில் அக்கறை கொண்டு புதிதாக தார் சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாகும்.

Related Tags :
Next Story