இந்திய குடியுரிமை திருத்த சட்டம்: இந்து, முஸ்லிம் மக்களை பிளவுபடுத்தும் - பா.ஜனதா முன்னாள் மந்திரி சதீஸ் ஜார்கிகோளி குற்றச்சாட்டு


இந்திய குடியுரிமை திருத்த சட்டம்: இந்து, முஸ்லிம் மக்களை பிளவுபடுத்தும் - பா.ஜனதா முன்னாள் மந்திரி சதீஸ் ஜார்கிகோளி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 23 Dec 2019 11:16 PM GMT (Updated: 23 Dec 2019 11:16 PM GMT)

பா.ஜனதா கட்சி இந்து, முஸ்லிம் மக்களை பிளவுபடுத்துகிறது என்று முன்னாள் மந்திரி சதீஸ் ஜார்கிகோளி கூறினார்.

பெங்களூரு,

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரி சதீஸ் ஜார்கிகோளி பெலகாவியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:

ரமேஷ் ஜார்கிகோளி என்னை பைத்தியம் என்று கூறினார். லட்சுமி ஹெப்பால்கர் எம்.எல்.ஏ.வை விஷம் என்றார். சந்தர்ப்பத்திற்கு ஏற்றார் போல் ரமேஷ் ஜார்கிகோளி பேசுவது வழக்கம். பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுவிட்டு, சித்தராமையா எங்கள் தலைவர் என்று சொல்கிறார்.

அவரது பேச்சை ஒரு காதில் கேட்டு இன்னொரு காது வழியாக விட்டுவிட வேண்டும். மந்திரியாக உள்ள ரமேஷ் ஜார்கிகோளி, எடியூரப்பாவின் அருகில் உட்கார உள்ளார். எடியூரப்பாவை எப்போது திட்டுவார் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

130 கோடி மக்கள்தொகை உள்ள நமது நாட்டில் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவது கடினம். பா.ஜனதா கட்சி, இந்து, முஸ்லிம் மக்களை பிளவுபடுத்து கிறது. இந்துத்துவாவை முன்னிறுத்துவது பா.ஜனதாவின் கொள்கை. பா.ஜனதாவுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடைபெறும்.

காங்கிரஸ் மட்டுமின்றி இந்த நாடே இந்த சட்டத்தை எதிர்க்கிறது. நாட்டில் பொருளாதார சிக்கல் எழுந்துள்ளது. இதை மூடிமறைக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது. அரசை விமர்சித்தால் தேச துரோகிகள் பட்டம் வழங்குகிறார்கள்.

பா.ஜனதா ஆட்சி அமைந்து 2 மாதத்தில் வால்மீகி சமூகத்திற்கு இட ஒதுக்கீடு வழங்குவதாக கூறினர். ஆனால் 4 மாதங்கள் ஆகிவிட்டது. இன்னும் சில நாட்கள் நாங்கள் பொறுத்திருந்து பார்ப்போம். அதன் பிறகு இந்த அரசை கண்டித்து போராட்டம் நடத்துவோம். இதுகுறித்து விரைவில் ஆலோசனை நடத்தி முடிவு எடுப்போம். இவ்வாறு சதீஸ் ஜார்கிகோளி கூறினார்.

Next Story