மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ்மோதல்: கோழிப்பண்ணை உரிமையாளர் பலி


மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ்மோதல்: கோழிப்பண்ணை உரிமையாளர் பலி
x
தினத்தந்தி 24 Dec 2019 3:00 AM IST (Updated: 24 Dec 2019 5:27 AM IST)
t-max-icont-min-icon

பல்லடம் அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் கோழிப்பண்ணை உரிமையாளர் பலியானார். இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பல்லடம்,

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (வயது48). இவர் பல்லடம் அருகே குப்புசாமி நாயுடுபுரத்தில் கோழி பண்ணை வைத்துள்ளார். இவர் நேற்று கிருஷ்ணாபுரத்தில் இருந்து குப்புசாமிநாயுடு புரத்தில் உள்ள கோழிப்பண்ணைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். பின்னர் பணிகளை முடித்த பின்னர் கோழிப்பண்ணையில் இருந்து பல்லடம் நோக்கி சென்றுள்ளார்.

கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நால்ரோடு அருகே சென்ற போது அவருக்கு பின்னால் கோவையில் இருந்து திருச்சி நோக்கி அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த பஸ் திடீரென்று மனோகரன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள்மீது மோதியது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மனோகரனை அருகில் உள்ளவர்கள் பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு மனோகரனை பரிசோதனை செய்த டாக்டர்கள், வரும் வழியில் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story