திருவோணம் அருகே மரத்தில் கார் மோதி புதுமாப்பிள்ளை பலி


திருவோணம் அருகே மரத்தில் கார் மோதி புதுமாப்பிள்ளை பலி
x
தினத்தந்தி 25 Dec 2019 4:30 AM IST (Updated: 25 Dec 2019 12:08 AM IST)
t-max-icont-min-icon

திருவோணம் அருகே புளிய மரத்தில் கார் மோதிய விபத்தில் புதுமாப்பிள்ளை பலியானார்.

ஒரத்தநாடு,

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்துள்ள ஆம்பலாப்பட்டு தெற்கு பரங்கிவெட்டிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் சந்திரகாசன். இவரது மகன் வினோத்(வயது 28). இவர் வெளியூரில் உள்ள தனது நண்பரை சந்தித்து விட்டு நேற்று அதிகாலை செங்கிப்பட்டி-பட்டுக்கோட்டை சாலையில் காரில் வீட்டிற்கு திரும்பிக்கொண்டு இருந்தார். காரை அவரே ஓட்டி வந்தார்.

அந்த கார் பாளமுத்தி பிரிவு சாலை அருகே வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சாலையோரத்தில் உள்ள புளியமரத்தில் மோதியது. இந்த விபத்தில் கார் அப்பளம்போல் நொறுங்கியது. இதில் வினோத் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

புதுமாப்பிள்ளை

இதுகுறித்து திருவோணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத் உடலை மீட்டு ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் பலியான வினோத்திற்கு திருமணமாகி 1½ மாதங்களே ஆகிறது. இவருக்கு கஜலெட்சுமி என்ற மனைவி உள்ளார்.

Next Story