குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு: நாகர்கோவிலில் முஸ்லிம்கள் திரண்டு ஆர்ப்பாட்டம்


குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு: நாகர்கோவிலில் முஸ்லிம்கள் திரண்டு ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 Dec 2019 4:30 AM IST (Updated: 25 Dec 2019 1:34 AM IST)
t-max-icont-min-icon

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாகர்கோவிலில் முஸ்லிம்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆதரவு தெரிவித்து காங்கிரஸ் தலைவர்களும் பங்கேற்றனர்.

நாகர்கோவில்,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதேபோல் தமிழகத்திலும் போராட்டங்கள் நடக்கிறது. இந்த நிைலயில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து குமரி மாவட்ட அனைத்து முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பு, உலமாசபை மற்றும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் இணைந்து நேற்று நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.

ஆர்ப்பாட்டத்துக்கு குமரி மாவட்ட அனைத்து முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் கான் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் அப்துல் லத்தீப், செயலாளர் ஸைனுல் ஆபிதீன் மஹ்லரி, எஸ்.டி.பி.ஐ. நிர்வாகி ஜாஹிர் உசேன், த.மு.மு.க மாவட்ட செயலாளர் செய்யது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கே.எஸ். அழகிரி பேச்சு

இந்த போராட்டத்திற்கு காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். அப்போது அங்கு திரளாக கூடியிருந்தவர்கள் மத்தியில் அவர் பேசுகையில் கூறியதாவது:-

மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜனதா, மக்கள் விரோத ஆட்சி செய்து வருகிறது. நாட்டின் சகோதரத்துவத்தை உருக்குலைக்கும் விதமாக குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்துள்ளது. முஸ்லிம், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் என பலதரப்பட்ட மதத்தினரும் வாழ்ந்து வரும் நாடு இந்தியா. 50 ஆண்டு காலம் இந்தியாவில் வாழ்ந்தவர்களை இந்தியன் இல்லை என கூறுவது அநியாயம்.

காங்கிரஸ் ஆதரவு

தவறான ஜி.எஸ்.டி., பண மதிப்பிழப்பு போன்றவற்றால் மக்கள் கடும் அவதியடைந்தனர். மேலும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, நாட்டின் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் பின்னடைவு, ேவலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு போன்ற பல பிரச்சினைகள் உள்ளது.

நாடு முழுவதும் நடைபெறும் குடியுரிமை திருத்த சட்ட போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி எப்போதும் ஆதரவாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

காங்கிரஸ் தலைவர்கள்

ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் ெபாதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக்கும் பேசினார். மேலிட பார்வையாளர் சஞ்சய்தத், மாநில செயல் தலைவர் மயூரா ஜெயகுமார், வசந்தகுமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ், சுரேஷ்ராஜன், குமரி கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், தி.மு.க. மாநகர செயலாளர் மகேஷ் மற்றும் பல்வேறு கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், ஏராளமான ஆண்கள் மற்றும் பெண்கள் திரண்டு குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் சாலை முழுவதும் திரண்டு நின்றதால், வடசேரியில் இருந்து மணிமேடை சந்திப்பு வரை சுமார் 3 மணி ேநரம் போக்குவரத்து தடை செய்யப்பட்டு மாற்றுப்பாதையில் வாகனங்கள் சென்றன. ஆர்ப்பாட்டத்தையொட்டி அப்பகுதி முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

Next Story