திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில், கொள்ளையில் ஈடுபட்டது வடமாநில கும்பலா? - குற்றவாளிகளை நெருங்க முடியாமல் போலீசார் திணறல்


திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில், கொள்ளையில் ஈடுபட்டது வடமாநில கும்பலா? - குற்றவாளிகளை நெருங்க முடியாமல் போலீசார் திணறல்
x
தினத்தந்தி 24 Dec 2019 10:00 PM GMT (Updated: 24 Dec 2019 8:15 PM GMT)

திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவில் கொள்ளையில் ஈடுபட்டது வடமாநில கொள்ளை கும்பலாக இருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் கொள்ளையர்களை நெருங்க முடியாமல் போலீசார் திணறி வருகிறார்கள்.

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் கீழையூரில் ஸ்ரீவீரட்டானேஸ்வரர் கோவில் உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இக்கோவிலுக்குள் 2 மர்ம ஆசாமிகள் புகுந்து 4 உண்டியல்களை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து திருக்கோவிலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளதாக துணைபோலீஸ் சூப்பிரண்டு மகே‌‌ஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், வீரட்டானேஸ்வரர் கோவில் கொள்ளை சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளிகளை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டு வருகிறோம் என்றார்.

ஆனால் கொள்ளை நடந்து ஒரு வாரம் ஆகப்போகின்ற நிலையில் இதுவரை குற்றவாளிகள் யார்? என்றுகூட அடையாளம் காண முடியாத அளவுக்கே போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கொள்ளை நடந்த கோவிலில் 2 இடத்தில் கொள்ளையர்களின் கைரேகைகள் பதிவு கிடைத்துள்ளதாக கூப்பட்ட நிலையிலும் கூட இந்த வழக்கில் எந்தவித முன்னேற்றமும் இல்லை.

இதனால் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது வடமாநில கொள்ளையர்களாக இருக்கலாமோ? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எனினும் குற்றவாளிகளை நெருங்க முடியாமல் போலீசார் திணறி வருவது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story