மாவட்ட செய்திகள்

காஞ்சீபுரம், வாலாஜாபாத்தில் - எம்.ஜி.ஆர். நினைவு தினம் + "||" + At Kancheepuram, Walajabad MGR. Memorial Day

காஞ்சீபுரம், வாலாஜாபாத்தில் - எம்.ஜி.ஆர். நினைவு தினம்

காஞ்சீபுரம், வாலாஜாபாத்தில் - எம்.ஜி.ஆர். நினைவு தினம்
காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளரும், காஞ்சீபுரம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான வாலாஜாபாத் பா.கணேசன் தலைமையில் எம்.ஜி.ஆர். உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்கள்.
வாலாஜாபாத்,

முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளரும், காஞ்சீபுரம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான வாலாஜாபாத் பா.கணேசன் தலைமையில் காஞ்சீபுரம் ஓரிக்கை, காவலான்கேட், பூக்கடை சத்திரம், தேரடி, கருக்கு பேட்டை, வாலாஜாபாத், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்ட எம்.ஜி.ஆர். உருவ படத்திற்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கருப்பு சட்டை அணிந்து மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்கள்.


பின்னர் பொதுமக்களுக்கும் கட்சி தொண்டர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர்கள் வி.சோமசுந்தரம், மைதிலி திருநாவுக்கரசு, மாவட்ட அவைத்தலைவர் குண்ணவாக்கம் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் அக்ரி நாகராஜன் தும்பவனம், ஜீவானந்தம், கே.பிரகாஷ்பாபு, தங்க பஞ்சாட்சரம், முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. காஞ்சீபுரத்தில் நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம்
காஞ்சீபுரத்தில் கலெக்டர் பொன்னையா தலைமையில் நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
2. காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 39 லட்சம் வாக்காளர்கள்
காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மொத்தம் 38 லட்சத்து 98 ஆயிரத்து 230 வாக்காளர்கள் உள்ளனர்.
3. காஞ்சீபுரம், மனுநீதி நாள் முகாம்
காஞ்சீபுரம் அய்யங்கார்குளம் கிராமத்தில் மனுநீதிநாள் முகாம் மாவட்ட கலெக்டர் பொன்னையா தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமில் அய்யங்கார்குளம் கிராமத்தை சுற்றியுள்ள பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கினார்கள்.
4. காஞ்சீபுரத்தை அடுத்த பரந்தூரில் 2-வது விமான நிலையம் - அமைச்சரவை ஒப்புதல்
காஞ்சீபுரத்தை அடுத்த பரந்தூரில் 2-வது விமான நிலையம் அமைப்பதற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
5. காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மனித சங்கிலி
காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.