முதல் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது: வாக்குச்சாவடிகளுக்கு தேவையான பொருட்களை அனுப்பி வைக்க ஏற்பாடு
கரூர் மாவட்டத்தில் முதல் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்ததையடுத்து வாக்குச்சாவடிகளுக்கு தேவையான பொருட்களை அனுப்பி வைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
கரூர்,
ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் 27 மற்றும் 30-ந்தேதிகளில் 2 கட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து கரூர் மாவட்டத்தில் உள்ள கரூர், தாந்தோணி, க.பரமத்தி, அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை, கடவூர், தோகமலை ஆகிய 8 ஊராட்சி ஒன்றியங்களில் வேட்புமனு தாக்கல் கடந்த 9-ந்தேதி தொடங்கி 16-ந்தேதி வரை ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான வேட்புமனுக்கள் பெறப்பட்டன. வேட்புமனு பரிசீலனை 17-ந்தேதியும், 19-ந்தேதி வேட்புமனுக்கள் திரும்ப பெறும் நிகழ்வும் நடைபெற்றது.
பிரசாரம் ஓய்ந்தது
இதில் கரூர், தாந்தோணி, க.பரமத்தி, அரவக்குறிச்சி ஆகிய 4 ஒன்றியங்களுக்கும் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் கட்ட தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலுக்கான வாக்குசேகரிப்பில் கடந்த சில நாட்களாக வேட்பாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்த பிரசாரம் நேற்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து முதல் கட்டமாக தேர்தல் நடைபெறும் தாந்தோணி ஒன்றியம் உள்பட வாக்குச்சாவடிகளுக்கு தேவையான ஸ்கேல், பென்சில், ரப்பர், அட்டை, மை உள்ளிட்ட 36 வகையான பொருட்களை வாக்குப்பெட்டிகளில் போடப்பட்டு தனித்தனியாக பிரித்து தயார் நிலையில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதனை தாந்தோணி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரும், தேர்தல் அலுவலருமான மனோகரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் வாக்குச்சாடிகளுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் இன்று (வியாழக்கிழமை) பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்படுகிறது.
இதேபோல கரூர், க.பரமத்தி, அரவக்குறிச்சி பகுதிகளில் உள்ள ஒன்றியங்களிலும் வாக்குப்பெட்டிகள் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்புவதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story