கொரடாச்சேரியில் விடிய, விடிய மழை: நெற்பயிர்கள் சாய்ந்தன விவசாயிகள் கவலை
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் விடிய, விடிய பெய்த மழையால் நெற்பயிர்கள் தரையில் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கொரடாச்சேரி,
வளிமண்டல சுழற்சியின் காரணமாக டெல்டா மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்து இருந்தது. இந்தநிலையில் திருவாரூர் மாவட்டத்தில் நள்ளிரவு முதல் தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியத்தில் கொரடாச்சேரி, கமலாபுரம், எண்கண், காட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து விடிய, விடிய மழை பெய்தது. இதனால் காட்டூர் உள்பட பல இடங்களில் நெற்பயிர்கள் ஈரம் தாங்காமல் தரையில் சாய்ந்து கிடக்கின்றன.
விவசாயிகள் கவலை
இந்த மழை தொடர்ந்து பெய்தால் தற்போது அறுவடைக்கு தயாராக இருக்கும் சம்பா நெற்பயிர்கள் அனைத்தும் சாய்ந்து பாதிப்புக்கு உள்ளாகி விடும் என விவசாயிகள் கவலையுடன் உள்ளனர். மேலும் இந்த மழை நெற்பயிரில் நெல்பழம் நோயினை உருவாக்கும். இளம் பயிர்களில் பூச்சி தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது எனவும் விவசாயிகள் தெரிவித்தனர். மேலும் உள்ளாட்சி தேர்தல் வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள வேட்பாளர் களுக்கு சிரமத்தினை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story