வாக்காளர்களுக்கு தென்னங்கன்றுகள் வினியோகம்; அ.ம.மு.க. வேட்பாளர் மீது வழக்கு
கறம்பக்குடி அருகே வாக்காளர்களுக்கு தென்னங்கன்றுகள் வினியோகிக்கப்பட்டது தொடர்பாக அ.ம.மு.க. வேட்பாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்களை வினியோகம் செய்வதாக தேர்தல் பறக்கும் படை அலுவலர்களுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து கறம்பக்குடி வட்ட வழங்கல் அலுவலர் முருகேசன் தலைமையிலான பறக்கும் படையினர் கறம்பக்குடி பகுதியில் சோதனை நடத்தினர்.
அப்போது கறம்பக்குடி அருகே உள்ள மைலன்கோன்பட்டியில் சரக்கு வேனில் தென்னங்கன்றுகள் கொண்டு செல்லப்பட்டு, வாக்காளர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது. இதை பார்த்த பறக்கும் படையினர், சரக்கு வேனில் இருந்த தென்னங்கன்றுகளை பறிமுதல் செய்தனர். மேலும் அதனை வினியோகம் செய்த வாலிபரை பறக்கும் படையினர் பிடித்து, கறம்பக்குடி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
வழக்கு
அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கறம்பக்குடி ஒன்றியக்குழு 7-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு, கறம்பக்குடி அருகே உள்ள பிலாவிடுதி கிராமத்தை சேர்ந்த ரமேஷ், அ.ம.மு.க. வேட்பாளராக போட்டியிடுகிறார். அவருக்கு குலையுடன் கூடிய தென்னமரம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவருக்கு ஆதரவாக வாக்காளர்களுக்கு, தென்னங்கன்றுகள் வினியோகம் செய்யப்பட்டது, தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அ.ம.மு.க. வேட்பாளர் ரமேஷ் மீது கறம்பக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story