தஞ்சையில் பலத்த மழையால் நெற்பயிர்கள் சாய்ந்தன அதிகபட்சமாக திருவிடைமருதூரில் 42 மி.மீ. கொட்டியது
தஞ்சையில் பெய்த பலத்த மழையினால் நெற்பயிர்கள் சாய்ந்தன. அதிகபட்சமாக திருவிடைமருதூரில் 42 மி.மீ. மழை கொட்டியது.
தஞ்சாவூர்,
தமிழகத்தில் வடகிழக்குப்பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. தொடக்க காலத்தில் ஒரு வாரத்திற்கும் மேல் மழை பெய்தது. அதன் பின்னர் விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மழை பெய்தது. அதன் பின்னர் மழை இன்றி காணப்பட்டது.
இந்த நிலையில் குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டலத்தின் மேலடுக்கு சுழற்சி காரணமாக டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூரில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
நெற்பயிர்கள் சாய்ந்தன
அதன்படி தஞ்சையில் நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து விடிய, விடிய மழை பெய்தது. இதே போல் திருவிடைமருதூர், பாபநாசம், பேராவூரணி, வல்லம், அணைக்கரை உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. நேற்று மதியம் வரை லேசான தூறலுடன் மழை பெய்து கொண்டே இருந்தது. அதன் பின்னர் மழை இன்றி வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது.
இந்த மழையினால் தஞ்சையில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி காணப்பட்டது. தஞ்சை சாந்தப்பிள்ளை கேட் பகுதியில் இருந்து பூக்காரத்தெரு செல்லும் ரெயில்வே கீழ்பாலத்தில் தண்ணீர் தேங்கியதால் மக்கள் அவதிப்பட்டனர். தஞ்சையை அடுத்த சூரக்கோட்டை, மடிகை, மன்னார்குடி சாலையில் உள்ள காட்டூர் உள்ளிட்ட பகுதிகளிலும் விளைந்த சம்பா நெற்பயிர்கள் சாய்ந்தன.
கும்பகோணம்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியில் விவசாயிகள் ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி என 3 போகமும் நெல் சாகுபடி செய்வது வழக்கம். இந்த ஆண்டு குறுவை சாகுபடி நிறைவடைந்த நிலையில் விவசாயிகள் தற்போது சம்பா மற்றும் தாளடி சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மேட்டூர் அணையில் இருந்து கிடைக்கும் தண்ணீர் மற்றும் மழைநீரை பயன்படுத்தி சாகுபடி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. கும்பகோணம் அருகே உள்ள அசூர், தேவனாஞ்சேரி, கரிச்சம்பாடி, திருநல்லூர், மணல்மேடு, நீலத்தநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆழ்துளை கிணறு மற்றும் ஆற்றுப்பாசனம் மூலமாக நெல் சாகுபடி செய்யப் பட்டுள்ளது.
அழுகும் அபாயம்
இந்த பகுதிகளில் நெற்பயிர்கள் நன்றாக வளர்ந்து கதிர் முற்றும் நிலையில் உள்ளன. இன்னும் 1 மாதத்துக்குள் நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராகி விடும் என விவசாயிகள் கூறுகிறார்கள். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கும்பகோணம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை நேற்று காலை வரை நீடித்தது.
பரவலாக பெய்து வரும் இந்த மழை காரணமாக வயல்களில் நெற்பயிர்கள் சாய்ந்து காணப்படுகின்றன. சில இடங்களில் சாய்ந்த பயிர்களை நிமிர்த்தி கட்டும் பணியிலும் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இதே நிலை நீடித்தால் மழைநீரில் நெற்பயிர்கள் மூழ்கி அழுகும் அபாயம் உள்ளது.
திருப்பனந்தாள்
பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு நல்ல மகசூல் கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்து இருந்தனர். திருப்பனந்தாள் பகுதியிலும் தொடர் மழையால் 50-க்கும் ஏக்கருக்கும் அதிகமான நெற்பயிர்கள் சாய்ந்து காணப்படுகின்றன. இந்த பகுதியில் நேற்று முன்தினம் காலை முதல் நேற்று காலை வரை மழை பெய்தது. இதன் காரணமாக சாலையில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
மழை அளவு
தஞ்சை மாவட்டத்தில் நேற்று காலை 7 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிக பட்சமாக திருவிடைமருதூரில் 42 மி.மீ. மழை கொட்டியது. மற்ற பகுதிகளில் பதிவான மழை அளவு விவரம் மில்லி மீட்டர் அளவில் வருமாறு:-
பாபநாசம் 31, கும்பகோணம் 22, மஞ்சளாறு 21, அணைக்கரை 17, பேராவூரணி 12, தஞ்சை 11, வல்லம் 11, அதிராம்பட்டினம் 9, அய்யம்பேட்டை 8, நெய்வாசல் தென்பாதி 7, குருங்குளம் 7, திருவையாறு 7, திருக்காட்டுப்பள்ளி 6, வெட்டிக்காடு 4, மதுக்கூர் 3, பூதலூர் 3, ஈச்சன்விடுதி 2, ஒரத்தநாடு 2, பட்டுக்கோட்டை 2.

Related Tags :
Next Story