குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி வியாபாரிகள் இன்று கடையடைப்பு போராட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி திருச்சி காந்திமார்க்கெட் வியாபாரிகள் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்துகிறார்கள்.
திருச்சி,
திருச்சி காந்திமார்க்கெட் மாநகராட்சி அனுமதி பெற்ற தரைக்கடை மற்றும் நிலையான கடை வியாபாரிகள் ஒற்றுமை சங்கத்தின் தலைவர் கருப்பையா, செயலாளர் காதர் மைதீன், பொருளாளர் அப்துல் ஹக்கீம் ஆகியோர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
குடியுரிமை திருத்த சட்டம் என்ற பெயரில் மத்திய அரசு மதரீதியாக பிரித்து பார்க்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. இந்த சட்டத்தினால் இலங்கை தமிழர்களும், முஸ்லிம்களும் அகதிகளாகும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே இந்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி திருச்சி காந்தி மார்க்கெட் மாநகராட்சி அனுமதி பெற்ற தரைக்கடை மற்றும் நிலையான வியாபாரிகள் ஒற்றுமை சங்கம் சார்பில் கடைகளுக்கு விடுமுறை விடும் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. இந்த போராட்டம் 25-ந்தேதி இரவு 10 மணிக்கு தொடங்கி 26-ந்தேதி (இன்று) இரவு 10 மணி வரை நடைபெறும்.
2 ஆயிரம் கடைகள்
இந்த போராட்டத்தில் கிழங்கு, மாங்காய், எலுமிச்சை, தக்காளி, வெங்காயம், பூ வியாபாரிகள், டீ டிபன் கடை வியாபாரிகள், நாட்டு மற்றும் இங்கிலீஷ் காய்கனி வியாபாரிகள் சங்கங்களை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொள்கிறார்கள். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் மூடப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர். முன்னதாக போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று காலை காந்திமார்க்கெட்டில் கருப்பையா தலைமையில் நடந்தது. இதில் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story