பெரம்பலூர், வேப்பூர் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 293 வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு பெட்டிகள் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பப்பட்டது
இன்று (வெள்ளிக்கிழமை) வாக்குப்பதிவையொட்டி பெரம்பலூர், வேப்பூர் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 293 வாக்குச்சாவடிகளுக்கும் வாக்குப்பதிவு பெட்டிகள் போலீஸ் பாதுகாப்புடன் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டன.
பெரம்பலூர்,
உள்ளாட்சி தேர்தலில் பெரம்பலூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட 20 கிராம ஊராட்சிகளுக்கும், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட 33 கிராம ஊராட்சிகளுக்கும் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. பெரம்பலூர், வேப்பூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் 93,898 ஆண் வாக்காளர்களும், 95,204 பெண் வாக்காளர்களும், 10 திருநங்கை வாக்காளர்களும் என மொத்தம் 1,89,112 பேர் உள்ளனர். பெரம்பலூர், வேப்பூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் ஏற்கனவே தலா ஒரு கிராம ஊராட்சி தலைவர் பதவியும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 37 பேரும், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் 42 பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதனால் பெரம்பலூர், வேப்பூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் மீதம் காலியாக 383 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு 1,180 பேரும், 51 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடங்களுக்கு 205 பேரும், 37 ஊராட்சி ஒன்றிய குழு வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு 156 பேரும், 4 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு 14 பேரும் என மொத்தம் 475 பதவியிடங்களுக்கு 1,555 பேர் போட்டியிடுகின்றனர்.
லாரிகள் மூலம் வாக்குப்பெட்டிகள் அனுப்பி வைப்பு
வேட்பாளர்கள் நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு தனது இறுதி கட்ட பிரசாரத்தை முடித்து கொண்டனர். வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு 122 வாக்குச்சாவடிகளிலும், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு 171 வாக்குச்சாவடிகளிலும் என மொத்தம் 293 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இன்று வாக்குப்பதிவு நடைபெறுவதை முன்னிட்டு பெரம்பலூர், வேப்பூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப் பெட்டிகள், வாக்குச்சாவடி பயன்படுத்தப்படும் 72 வகையான பொருட்கள் அடங்கிய பெட்டி ஆகியவை அனுப்பும் பணி நேற்று மதியம் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 122 வாக்குச்சாவடிகளுக்கு, பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்தும், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 171 வாக்குச்சாவடி மையங்களுக்கு, வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்தும் நடைபெற்றது. வாக்குப்பெட்டிகள், வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படவுள்ள 72 வகையான பொருட்கள் அடங்கிய பெட்டி ஆகியவற்றை ஊழியர்கள் உதவியுடன் போலீசார் லாரிகள் மூலம் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டனர். பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த பணியினை பெரம்பலூர் மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன் ஆய்வு செய்தார். லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்ட பொருட்கள், அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் வாக்குச்சாவடி அலுவலர்கள் முன்னிலையில் இறக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்று வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்குவதால் அதிகாலையில் வாக்குச்சாவடிகளை தயார் நிலையில் வைத்து விடுவார்கள்.
இன்று வாக்குப்பதிவு நடைபெறும் 122 வாக்குச்சாவடிகளில் 916 அலுவலர்களும், இதேபோல் வேப்பூர் ஊராட்சி ஒன்றியங்களில் 171 வாக்குச்சாவடிகளில் 1,305 அலுவலர்களும் என மொத்தம் 2,221 அலுவலர்கள் பணியில் ஈடுபடவுள்ளனர். அவர்களுக்கான பணி ஒதுக்கீடு ஆணை பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு வேப்பூர் பாரதிதாசன் உறுப்பு மகளிர் கல்லூரியிலும் வழங்கப்பட்டது. இதனால் அந்த பகுதிகளில் பணி ஒதுக்கீடு ஆணையினை வாங்குவதற்காக அலுவலர்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.

Related Tags :
Next Story