கன்னங்குறிச்சியில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை; முதியவர் கைது


கன்னங்குறிச்சியில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை; முதியவர் கைது
x
தினத்தந்தி 27 Dec 2019 3:45 AM IST (Updated: 27 Dec 2019 3:13 AM IST)
t-max-icont-min-icon

கன்னங்குறிச்சியில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.

கன்னங்குறிச்சி,

சேலம் சின்னதிருப்பதி பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 65). இவர் வட்டிக்கு பணம் கொடுத்து வந்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த 30 வயது இளம்பெண்ணிற்கு வட்டிக்கு பணம் கொடுத்தார்.

இதில் அவர் பாதித்தொகை கொடுத்துவிட்டு மீதி பணத்தை திருப்பி கொடுக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த இளம்பெண் கன்னங்குறிச்சி போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தார்.

கைது

அந்த மனுவில், வட்டிக்கு கொடுத்த பணத்தை திருப்பித்தராததால், ரவிச்சந்திரன், எனது கையை பிடித்து இழுத்ததுடன், எனக்கு பாலியல் ெதால்லை கொடுத்தார். மேலும் தகாதவார்த்தைகளால் என்னை திட்டினார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இது குறித்து கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரவிச்சந்திரனை கைது செய்தனர்.

Next Story