வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொன்று ரூ.7¼ லட்சம் நகை, பணம் கொள்ளை விராரில் பயங்கரம்
விராரில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொலை செய்து ரூ.7¼ லட்சம் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
வசாய்,
விராரில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொலை செய்து ரூ.7¼ லட்சம் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
கொலை- கொள்ளை
பால்கர் மாவட்டம் விரார் விராத் நகரை சேர்ந்த மூதாட்டி மனிஷா(வயது63). இவர் கணவர் மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை மூதாட்டி மட்டும் வீட்டில் தனியாக இருந்து உள்ளார். இந்தநிலையில் மாலை 5.30 மணியளவில் மர்மநபர் ஒருவர் வீட்டிற்குள் புகுந்து உள்ளார்.
இதைப்பார்த்து மூதாட்டி சத்தம்போட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த ஆசாமி மூதாட்டியை கத்தியால் குத்தினார். இதில், மூதாட்டி மனிஷா ரத்தவெள்ளத்தில் சரிந்தார்.
இதைத்தொடர்ந்து அந்த ஆசாமி வீட்டில் இருந்த ரூ.7 லட்சத்து 29 ஆயிரம் மதிப்பிலான தங்க, வெள்ளி நகைகள், ரூ.20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து தப்பிஓடிவிட்டார்.
மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு
இதுபற்றி தகவல் அறிந்து சென்ற போலீசார் மூதாட்டியை மீட்டு அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மூதாட்டியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மூதாட்டியை கொலை செய்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மா்ம ஆசாமியை வலைவீசி தேடிவருகின்றனர்.
Related Tags :
Next Story