வண்டலூர் பூங்கா அருகே கட்டி முடிக்கப்பட்ட மேம்பாலத்தை திறக்க - பொதுமக்கள் கோரிக்கை


வண்டலூர் பூங்கா அருகே கட்டி முடிக்கப்பட்ட மேம்பாலத்தை திறக்க - பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 30 Dec 2019 3:45 AM IST (Updated: 29 Dec 2019 11:21 PM IST)
t-max-icont-min-icon

வண்டலூர் பூங்கா அருகே கட்டி முடிக்கப்பட்ட மேம்பாலத்தை திறக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் பூங்கா அருகே ஜி.எஸ்.டி சாலை நடுவில் உயர்மட்ட மேம்பால பணி கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதனால் கிளாம்பாக்கத்தில் இருந்து வண்டலூர் பூங்கா வரை தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வண்டலூர் பூங்காவில் இருந்து ஊரப்பாக்கம் கடப்பதற்குள் சுமார் 2 மணி நேரம் ஆகிவிடுகிறது. இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

அவசர காலத்திற்கு கூட ஆஸ்பத்திரிக்கு ஒரு ஆம்புலன்ஸ் விரைவாக செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் ஒரு சில சமயங்களில் ஆம்புலன்சில் செல்லும் நோயாளிகள் உயிரிழக்க நேரிடுகிறது.

ஏற்கனவே வண்டலூர் மீஞ்சூரில் இருந்து வண்டலூர் உயிரியல் பூங்கா வரும் மேம்பாலம் ஒரு பகுதி மட்டும் திறக்கப்பட்டுள்ளது மற்றொரு பகுதி கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் அப்படியே இருப்பதால் வண்டலூர் பூங்கா அருகே தினமும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

எனவே திறக்கப்படாமல் உள்ள ஒரு பகுதி அதாவது வண்டலூர் பூங்காவில் இருந்து மீஞ்சூர் செல்லும் மேம்பாலத்தை உடனடியாக போக்குவரத்து பயன்பாட்டிற்கு திறந்து வைத்தால், வண்டலூர் பூங்கா அருகே ஜி.எஸ்.டி. சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியும் என்று வாகன ஓட்டிகள் கருதுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக வண்டலூரில் இருந்து மீஞ்சூர் செல்லும் ஒரு பகுதி மேம்பாலத்தை திறக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story