புத்தாண்டு கொண்டாட்டம்: நட்சத்திர ஓட்டல்களில் அனுமதியின்றி கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது - போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அனுமதி பெறாமல் நட்சத்திர ஓட்டல், பண்ணை வீடுகள், விடுதிகளில் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது என்று செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மாமல்லபுரம்,
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம், கோவளம், கேளம்பாக்கம் பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஓட்டல்கள், விடுதிகள், கடற்கரை பண்ணை வீடுகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து அவற்றின் இயக்குனர்கள், உரிமையாளர்களை அழைத்து செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் தலைமையில் மாமல்லபுரத்தில் போலீசார் ஆலோசனை கூட்டம் நடத்தினர். புத்தாண்டை முன்னிட்டு ஓட்டல் நிர்வாகத்தினர் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் விளக்கி கூறினார். அப்போது அவர் பேசியதாவது:-
புத்தாண்டை முன்னிட்டு சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் மாமல்லபுரம் மற்றும் கோவளம் கடலில் குளிக்க தடை செய்யப்பட்டுள்ளது. மீனவர்கள் சிலர் பயணிகளை படகில் கடலுக்கு அழைத்து செல்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.
கடற்கரை பகுதியில் புத்தாண்டு வாழ்த்து சொல்லும் நோக்கத்தில் சுற்றுலா வரும் பெண்களை கேலி, கிண்டல் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாமல்லபுரத்தில் உள்ள ஓட்டல்களில் 31-ந்தேதி மாலை 6 மணிக்கு மேல் நீச்சல் குளங்களில் குளிக்க அனுமதி வழங்க கூடாது. நீச்சல் குளங்கள் போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு சீல் வைக்கப்படும். மது குடித்து விட்டு நீச்சல் குளங்களில் குளித்து போதையில் நிலைதடுமாறி விழுந்து, மூச்சு திணறி உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் முன்னேற்பாடாக காவல் துறை சார்பில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.
மேலும் எந்த ஓட்டல்களிலும் 31-ந்தேதி இரவு 1 மணிக்கு மேல் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்த கூடாது.
புத்தாண்டையொட்டி மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலை பகுதிகளில் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டத்தில் மது குடித்து விட்டு வாகனம் ஓட்டினால் அந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, அவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும்.
குற்ற செயல்களை கண்டுபிடிக்கும் வகையில் சாதாரண உடையிலும் போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர். கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலையில் செல்லும் இரு சக்கர வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களும் பல்வேறு இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் மூலம்் வாகன தணிக்கை செய்யப்படும். கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் பண்ணை விடுகள், கேளிக்கை விடுதிகளில் காவல் துறை அனுமதி பெறாமல் எந்தவொரு கேளிக்கை நிகழ்ச்சிகளும் நடத்தக்கூடாது.
கேளிக்கை கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு வரும் விருந்தினர்களிடம் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஏதாவது ஒரு அடையாள அட்டை பெற்றுக்கொண்டே ஓட்டல் நிர்வாகத்தினர் அறைகள் ஒதுக்கி தரவேண்டும். அடையாள அட்டை சமர்பிக்காத நபர்களுக்கு அறைகள் கொடுக்க கூடாது. கிழக்கு கடற்கரை சாலையில் மோட்டார் சைக்கிள் பந்தயத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் மோட்டர் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டு, அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் மாமல்லபுரம் துணை கோட்ட உதவி கண்காணிப்பாளர் சுந்தரவதனம், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், மாமல்லபுரம் ஓட்டல்கள் மற்றும் கேளிக்கை விடுதி உரிமையாளர்கள், இயக்குனர்கள், மேலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story