சங்கராபுரம், உளுந்தூர்பேட்டையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
சங்கராபுரம், உளுந்தூர்பேட்டையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
சங்கராபுரம்,
சங்கராபுரம் வட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சங்கராபுரம் பஸ் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதற்கு வட்ட தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார். வட்ட பொருளாளர் பிரபாகரன், வட்ட துணைத்தலைவர் முரளி, வட்ட துணை செயலாளர்கள் ராஜ்குமார், மதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்ட செயலாளர் வெங்கடேசன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் ஏழுமலை கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும், இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமையை மறுக்க கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
உளுந்தூர்பேட்டை
இதேபோல் உளுந்தூர்பேட்டை தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் சதீஷ் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் மார்த்தாண்டம், நகர நிர்வாகிகள் ராமராஜன், பால்ராஜ், சின்னராசு, சேகுவாரா, கஸ்தூரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் பழனி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இதில் குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க அகில இந்திய தலைவர் முகமது ரியாஸ் கைதை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story