கரூர் மாவட்ட உள்ளாட்சி தேர்தல்: குளித்தலை உள்பட 4 ஒன்றியங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு
கரூர் மாவட்டத்தில் இன்று நடைபெறும் 2-ம் கட்ட தேர்தலில் குளித்தலை உள்பட 4 ஒன்றியங்களில் வாக்குப்பதிவு நடக்கிறது. இதையொட்டி வாக்குச்சாவடிகளுக்கு தேவையான பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
குளித்தலை,
கரூர் மாவட்டத்தில் கடந்த 27-ந்தேதி கரூர், தாந்தோணி, க.பரமத்தி, அரவக்குறிச்சி ஒன்றியங்களில் நடந்த முதல் கட்ட தேர்தலில் 82.54 சதவீதம் வாக்குகள் பதிவானது. தொடர்ந்து குளித்தலை, கிருஷ்ணராயபுரம், கடவூர், தோகைமலை ஒன்றியங்களில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஒன்றியக்குழு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆகிய பதவி களுக்கு இன்று (திங்கட் கிழமை) 2-ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.
இதில் குளித்தலையில் 118 பதவிகளுக்கு 330 வேட்பாளர்களும், கிருஷ்ணராயபுரத்தில் 216 பதவிகளுக்கு 631 வேட்பாளர்களும், கடவூரில் 175 பதவிகளுக்கு 545 வேட்பாளர்களும், தோகைமலையில் 170 பதவிகளுக்கு 480 வேட்பாளர்களும் தேர்தல் களத்தில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது ஆகும். அந்த 4 ஒன்றியங்களிலும் சேர்த்து 1,37,439 ஆண்கள், 1,40,681 பெண்கள், 48 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2,78,168 வாக்காளர்கள் இருக்கிறார்கள். 2-ம் கட்ட தேர்தலையொட்டி 280 இடங்களில் 474 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள், முதியோர் வாக்களிக்க ஏதுவாக சக்கர நாற்காலிகள் தயார் நிலையில் இருக்கின்றன.
வாக்குச்சாவடிகளுக்கு பொருட்கள் அனுப்பி வைப்பு
2-ம் கட்ட தேர்தலையொட்டி குளித்தலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வாக்குப்பெட்டிகள் மற்றும் வாக்குப்பதிவுக்கு தேவையான பேனா, பென்சில், ரப்பர், மை பாட்டில், பசை, சிறிய கத்தி உள்ளிட்ட பொருட்கள் மற்றும் வாக்குசெலுத்தும் இடத்தினை மறைமுகமாக வைப்பதற்கான அட்டை, வேட்பாளர் பட்டியல், அலுவலர்களுக்கான தேர்தல் பணி அட்டை உள்பட முக்கிய ஆவணங்கள் ஆகியவை சாக்குபைகளில் கட்டப்பட்டு தனித்தனியாக தயார் நிலையில் இருந்தன.
பின்னர் ஒன்றிய தேர்தல் அதிகாரியும், வட்டார வளர்ச்சி அலுவலர் குமரவேல் உள்பட அதிகாரிகள் அதனை பார்வையிட்டு அனைத்து பொருட்களும் சரியான முறையில் உள்ளனவா? என சரிபார்த்தனர். பின்னர் வேன் வரவழைக்கப்பட்டு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பெட்டிகள், வாக்குப்பதிவுக்கான பொருட்கள் உள்ளிட்டவை அதில் ஏற்றப்பட்டு வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதே போல் கடவூர், தோகைமலை, கிருஷ்ணராயபுரம் ஒன்றியங்களிலிருந்தும் வாக்குப்பெட்டிகள் பொருட்களுடன் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. குளித்தலையில் 407-ம், கிருஷ்ணராயபுரத்தில் 450-ம், கடவூரில் 611-ம், தோகைமலையில் 392-ம் என மொத்தம் 1,860 வாக்கு பெட்டிகள் தேர்தல் பயன்பாட்டுக்காக தயார் நிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
பாரபட்சமின்றி செயலாற்ற அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்
இதற்கிடையே ஒன்றிய அலுவலகத்திற்கு வருகை தந்த வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு, வாக்குப்பதிவின்போது பாரபட்சம் ஏதும் காட்டாமல் நடுநிலைமையோடு செயலாற்ற வேண்டும் எனவும் வாக்குச்சாவடிக்குள் பிரச்சினை ஏதேனும் ஏற்பட்டால் உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியிலிருக்கும் போலீசாரிடம் தெரிவித்து அடுத்த கட்ட நடவடிக்கையை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும் வாக்காளரின் ஆவணங்களை சரிபார்த்து மை வைப்பது, வாக்கு சீட்டுகளை வழங்குவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதிலிருந்து, முடிவில் வாக்கு பெட்டிக்கு சீல் வைத்து பாதுகாப்புடன் ஒப்படைப்பது வரையிலான பணிகள் பற்றி எடுத்துரைத்து வாக்குச்சாடிவகளுக்கு அந்தந்த அலுவலர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். குளித்தலை உள்பட 4 ஒன்றியங்களிலும் வாக்குச்சாவடிகளுக்கு பணிக்கு வந்த அலுவலர்கள், வாக்குப்பெட்டிகள் உள்ளிட்ட பொருட்களை பெற்று கொண்டு வாக்குப் பதிவு நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.
பாதுகாப்புக்கு 914 போலீசார்
வாக்குச்சாவடியிலேயே தங்கும் அந்த அலுவலர்கள், தேர்தல் வாக்குப்பதிவு பணிகளை தொடங்கி மக்கள் வாக்குகளை செலுத்த வழிவகை செய்வர். 2-ம் கட்ட தேர்தல் பாதுகாப்பு பணியில் 914 போலீசார் மற்றும் 3,799 அலுவலர்கள் ஈடுபடுகின்றனர். தேர்தல் பணியில் ஈடு படுவோர் தபால் வாக்கினை செலுத்தும் வகையில் அந்தந்த ஒன்றியங்களில் சேவை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தை பொறுத்தவரையில் 605 பேருக்கு தபால் வாக்கு உள்ளது. தேர்தலையொட்டி நடத்தை விதிகளை மீறி வாக்காளர்களுக்கு பணம், விலைமதிப்புடைய பொருட்கள் ஏதும் பட்டுவாடா செய்யப் படுகிறதா? விதிமீறி பிரசாரத்தில் யாரும் ஈடுபடுகின்றனரா? என பறக்கும் படை குழுவினர், தேர்தல் அதிகாரிகள் ஆகியோர் மாவட்ட தேர்தல் பார்வையாளர் வெங்கடாசலம் அறிவுறுத்தலின்பேரில் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story