7 ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் இன்று 2-வது கட்ட வாக்குப்பதிவு


7 ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் இன்று 2-வது கட்ட வாக்குப்பதிவு
x
தினத்தந்தி 29 Dec 2019 10:15 PM GMT (Updated: 29 Dec 2019 8:11 PM GMT)

மாவட்டத்தில் 2-வது கட்டமாக 7 ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் இன்று (திங்கட்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது.

சிவகங்கை, 

மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முதல் கட்டமாக கடந்த 27-ந்தேதி சிவகங்கை, காளையார் கோவில், திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி ஆகிய 5 ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. 2-வது கட்டமாக இன்று (திங்கட்கிழமை) கல்லல், தேவகோட்டை, கண்ணங்குடி, சாக்கோட்டை, திருப்பத்தூர், சிங்கம்புணரி, எஸ்.புதூர் ஆகிய 7 ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் 7 ஒன்றியங்களிலும் 220 கிராம ஊராட்சி தலைவர்கள், 1,545 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 77 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 8 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இதற்காக 856 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் பணியில் 4,218 உறுப்பினர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்த 7 ஊராட்சி ஒன்றியங்களிலும் 4 லட்சத்து 1,786 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரோஹித்நாதன் தலைமையில் 2 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 9 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், உள்ளூர் போலீசார், சிறப்பு காவல் படை போலீசார், முன்னாள் ராணுவத்தினர், ஊர்க்காவல் படையினர், ஓய்வு பெற்ற போலீசார் உள்பட 2 ஆயிரம் பேர் தேர்தல் பாதுகாப்பு பணியில் உள்ளனர். இது தவிர 68 வாகனங்களில் போலீசார் ரோந்து வருவார்கள். மேலும் 12 இடங்களில் அதிரடி படையினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

Next Story