சேலம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஏட்டுவின் மோட்டார் சைக்கிளை திருடிய அமைச்சு பணியாளர் கைது
சேலம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஏட்டுவின் மோட்டார்சைக்கிளை திருடிய அமைச்சு பணியாளர் கைது செய்யப்பட்டார்.
சேலம்,
சேலம் அன்னதானப்பட்டி லைன்மேட்டில் உள்ள ஆயுதப்படையில் ஏட்டாக பணியாற்றி வருபவர் சுந்தரம் (வயது 44). இவர் கடந்த 24-ந் தேதி சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு சென்றிருந்தார். அப்போது அவர் தனது மோட்டார் சைக்கிளை அலுவலகத்தின் பின்புற பகுதியில் நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். பின்னர் வந்து பார்த்த போது அவருடைய மோட்டார் சைக்கிளை காணவில்லை. அது திருட்டு போனது தெரியவந்தது.
இதுகுறித்து சுந்தரம் அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவின் பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
இதில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள போக்குவரத்து பிரிவில் அமெச்சு பணியாளராக பணியாற்றி வரும் ராஜேந்திரன்(50) என்பவர் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டது. கைதான ராஜேந்திரன் மீது துறை ரீதியான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என்று உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story