ரூ.4 ஆயிரம் கோடி மோசடி வழக்கு தொடர்பாக வருமானவரித்துறை உதவி ஆணையர் வீட்டில் சி.பி.ஐ. அதிரடி சோதனை
ரூ.4 ஆயிரம் கோடி மோசடி வழக்கு தொடர்பாக சேலத்தில் வருமானவரித்துைற உதவி ஆணையர் வீட்டில் சி.பி.ஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் முக்கியமான ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.
சேலம்,
கர்நாடக மாநிலம் ெபங்களூருவை சேர்ந்தவர் முகமது மன்சூர்கான். இவர் சிவாஜி நகரில் ஐ.எம்.ஏ. என்ற பெயரில் கடந்த 2006-ம் ஆண்டு நிதிநிறுவனம் நடத்தி வந்தார். அப்போது நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டியுடன் சேர்த்து அந்த பணத்துக்குரிய தங்க நகைகள் தரப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதை நம்பி ெ்பங்களூருவை சேர்ந்த ஏராளமானவர்கள் பணம் முதலீடு செய்தனர். மேலும் தமிழகம் மட்டுமின்றி வேறு மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் இந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தனர். இந்த நிலையில் முதலீடு செய்தவர்களுக்கு பணத்தை அவர் திரும்பகொடுக்கவில்லை. தங்க நகைகளும் பரிசாக தரவில்லை.
ரூ.4 ஆயிரம் கோடி
இதையடுத்து இந்த நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் இது குறித்து பெங்களூரு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதனிடையே ரூ.4 ஆயிரம் கோடிக்கு மேல் மோசடி செய்து விட்டு முகமது மன்சூர்கான் துபாய் தப்பிச்சென்றது தெரியவந்தது. இதற்கிடையில் இந்த வழக்கு விசாரணை கர்நாடக மாநில சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு குறித்து புலனாய்வு பிரிவு ே்பாலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
சி.பி.ஐ. விசாரணை
இந்தநிலையில் துபாயில் இருந்து இந்தியா வந்த முகமது மன்சூர்கானை ெபங்களூரு போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் இந்த மோசடியில் அரசியல் பிரமுகர்கள், உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தது தெரியவந்தது.
இ்தையடுத்து இந்த மோசடியில் தொடர்புடைய சிலரை போலீசார் ைகது செய்தனர். இந்தநிலையில் இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. அதன்பேரில் சி.பி.ஐ. அதிகாரிகள் இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில், இந்த மோசடியில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் சொத்து மதிப்பீடு பிரிவில் உதவி ஆணையராக பணியாற்றும் குமார் உள்பட சில அதிகாரிகள் ஆதரவாக செயல்பட்டு வந்தது தெரியவந்தது.
சேலத்தில் சோதனை
இதையடுத்து பெங்களூரு, கார்வார், சேலம் உள்பட 5 இடங்களில் நேற்று முன்தினம் சி.பி.ஐ. அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர். அதன்படி, சேலம் அழகாபுரம் பெரியசாமி நகர் 3-வது கிராசில் உள்ள வருமான வரித்துறை உதவி ஆணையர் குமாரின் வீட்டில், சி.பி.ஐ. அதிகாரிகள் 5 பேர் கொண்ட குழுவினர் அதிரடியாக நுழைந்து தீவிர சோதனை தொடங்கினர்.
பின்னர் சோதனையை முடித்துக்கொண்டு சி.பி.்ஐ. அதிகாரிகள் அன்று இரவே சென்று விட்டனர். இதில் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி சென்றதாக கூறப்படுகிறது. வருமான வரித்துறை உதவி ஆணையர் குமார் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தியது, சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையில் இந்த வழக்கு தொடர்பாக ஓசூர் விநாயகபுரத்தில் உள்ள ஒருவரது தோட்டத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தியதாக கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து நிருபர்கள் அந்த பகுதிக்கு சென்று விசாரித்தனர். அப்போது அந்த பகுதியில் எந்த சோதனையும் நடக்கவில்லை என தெரியவந்தது.

Related Tags :
Next Story