ஆங்கில புத்தாண்டு பிறப்பு: சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோவிலில் படி பூஜை
ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோவிலில் படி பூஜை நடந்தது.
கபிஸ்தலம்,
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சுவாமிமலையில் சுவாமிநாதசுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் முருகனின் அறுபடை வீடுகளில் 4-வது படை வீடாகும்.இங்கு ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு விசுவரூப தரிசனம் நடைபெற்றது. அப்போது திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
படி பூஜை
4.30 மணிக்கு தனுர்மாத சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் மூலவர் சுவாமிநாத சுவாமி வைரவேல், வைரகிரீடத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து மகாதீபாராதனை காட்டப்பட்டது.
இதையடுத்து கோவிலில் 60 தமிழ் ஆண்டுகளின் பெயரால் அமைந்த திருப்படிகளுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு படிகளில் குத்துவிளக்குகளை ஏற்றி வைத்து வழிபாடு செய்தனர்.

Related Tags :
Next Story