கும்பகோணத்தில் நெற்பயிர்களை நாசம் செய்யும் பறவைகள் விவசாயிகள் விரக்தி


கும்பகோணத்தில் நெற்பயிர்களை நாசம் செய்யும் பறவைகள் விவசாயிகள் விரக்தி
x
தினத்தந்தி 3 Jan 2020 4:15 AM IST (Updated: 3 Jan 2020 12:59 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணத்தில் நெற் பயிர்களை பறவைகள் நாசம் செய்து வருகின்றன. இதனால் விவசாயிகள் விரக்தியில் உள்ளனர்.

கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் சம்பா, தாளடி நெல் சாகுபடி செய்து உள்ளனர். வழக்கத்தைவிட அதிகமாக மழை பெய்ததாலும், பூச்சி தாக்குதல் மற்றும் நோய் தாக்குதல் காரணமாகவும் இந்த ஆண்டு மகசூல் பாதிப்பு ஏற்படும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் கும்ப கோணம் பகுதியில் நெற் பயிர்களை பறவைகள் நாசம் செய்து வருவதால் விவசாயிகள் விரக்தி அடைந் துள்ளனர்.

நெற்கதிர்கள் முளைத்து வெளிவந்துள்ள நிலையில் பறவைகள் கூட்டம் கூட்டமாக வந்து பயிர்களை தின்று வருகின்றன. இதனால் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்படும் என விவசாயிகள் கூறுகிறார்கள். பறவைகள் கூட்டத்தை விரட்ட பிளாஸ்டிக் கேன்களால் ஒலி எழுப்புவது உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

இதுகுறித்து கும்பகோணத்தை அடுத்த ஏரி பகுதியை சேர்ந்த விவசாயி சுதாகர் கூறியதாவது:-

பயிர்கள் நாசம்

நான் 2 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்துள்ளேன். தற்போது நெற்பயிர்கள் சூல்பிடித்து கதிர் வெளிவந்துள்ளது. இவற்றை பறவைகள் கூட்டம் கூட்டமாக வந்து நாசம் செய்து வருகின்றன. நெல்லை சாப்பிட வரும் பறவைகள் பயிர்களை முறித்துவிடுவதால் பயிர்கள் முழுவதுமாக நாசம் அடைந்து விடுகின்றன.

இதனால் என்னை போன்ற விவசாயிகளுக்கு பெரும் ந‌‌ஷ்டம் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. பறவைகளை விரட்ட பல நடவடிக்கைகளை கையாண்டு பார்த்தும் அவற்றை எங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story