மாவட்ட செய்திகள்

கார் விபத்தில் தாய், மகன் பலி - 4 பேர் படுகாயம் + "||" + Mother, son killed in car accident - 4 Injured

கார் விபத்தில் தாய், மகன் பலி - 4 பேர் படுகாயம்

கார் விபத்தில் தாய், மகன் பலி - 4 பேர் படுகாயம்
சாத்தூர் அருகே கார் விபத்தில் தாய், மகன் பரிதாபமாக உயிரிழந்தனர். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
சாத்தூர்,

சாத்தூரில் இருந்து கோவில்பட்டி நோக்கி நேற்று கார் ஒன்று சென்று கொண்டு இருந்தது. இந்த கார் பெத்துரெட்டிபட்டி விலக்கு அருகே திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடியது.

பின்னர் சாலை நடுவில் இருந்த தடுப்பை தாண்டி எதிர்திசையில் கோவில்பட்டியில் இருந்து சாத்தூரை நோக்கி வந்த கார் மீது நேருக்குநேர் மோதியது. இதில் கோவில்பட்டியில் இருந்து வந்த காரில் இருந்த பெங்களூரை சேர்ந்த கிரேசி(வயது47) மற்றும் அவரது மகன் அருண்(12) ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேேய பலியாகினர்.

மேலும் காரை ஓட்டிவந்த ஜான் மற்றும் ஒருவர் படுகாயங்களுடன் சாத்தூர் அரசுமருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். சாத்தூரில் இருந்து சென்ற காரில் இருந்த 2 பேரும் படுகாயங்களுடன் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கார் பள்ளத்தில் கவிழ்ந்து பாட்டி-பேரன் பலி - திருமண வீட்டிற்கு சென்று விட்டு திரும்பியபோது பரிதாபம்
அரவக்குறிச்சி அருகே திருமண வீட்டிற்கு சென்று விட்டு திரும்பியபோது கார் பள்ளத்தில் கவிழ்ந்து பாட்டி-பேரன் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.
2. காஞ்சீபுரத்தில் தாய், மகள் தூக்குப்போட்டு தற்கொலை
காஞ்சீபுரத்தில் தாய், மகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
3. ஓட்டப்பிடாரம் அருகே விபத்து: தாய்-9 மாத குழந்தை பலி - மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியது
ஓட்டப்பிடாரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் தாய், 9 மாத குழந்தை பரிதாபமாக இறந்தனர்.
4. நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி அண்ணன்-தங்கை பலி; 7 பேர் படுகாயம்
பள்ளிகொண்டா அருகே நின்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் அண்ணன்-தங்கை பரிதாபமாக இறந்தனர். 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
5. வேலூர் அருகே, மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் தாய், மகள் பலி
வேலூர் அருகே உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியபோது, மோட்டார்சைக்கிள் மீது கன்டெய்னர் லாரிமோதியதில் தாய், மகள் பலியானார்கள். வாலிபர் காயமடைந்தார். இந்த விபத்து பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–