மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி ஊராட்சி தலைவர் வேட்பாளர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகை
மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக்கோரி ஊராட்சி தலைவர் வேட்பாளர் தனது ஆதரவாளர்களுடன் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார். .
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொட்டரை கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு காந்தி என்பவர் போட்டியிட்டார்.
நேற்று மதியம் இவர், தனது ஆதரவாளர்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தார். பின்னர் அவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் வேட்பாளர் காந்தி கூறும்போது, கொட்டரை கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு நான் (காந்தி) மற்றும் திருமுருகன், சின்னசாமி ஆகிய 3 பேர் போட்டியிட்டோம். அதற்கான வாக்குப்பதிவு முடிந்து கடந்த 2-ந்தேதி பாடாலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வாக்கு எண்ணிக்கை நடந்தது. அப்போது தபால் வாக்குகளை எனது மற்றும் என்னுடைய முகவர்கள் முன்னிலையில் அலுவலர்கள் சரியாக எண்ணாததால் 4 ஓட்டுகள் வித்தியாசத்தில் திருமுருகன் என்பவர் வெற்றி பெற்றதாக தவறுதலாக அறிவித்து விட்டனர். எனவே கொட்டரை கிராம ஊராட்சி தவைர் பதவிக்கு மட்டும் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
கலெக்டர் அலுவலகத்தில் மனு
பின்னர் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, ஒரு சிலரை மட்டும் கலெக்டர் அலுவலகத்திற்குள் சென்று மனு கொடுக்க அனுமதித்தனர். அதனை தொடர்ந்து வேட்பாளர் காந்தி மற்றும் அவருடன் ஒரு சிலர் சென்று, மனு கொடுத்து விட்டு கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story