வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணியில் காங்கிரசார் ஈடுபட வேண்டும் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. அறிக்கை


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணியில் காங்கிரசார் ஈடுபட வேண்டும் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. அறிக்கை
x
தினத்தந்தி 4 Jan 2020 10:30 PM GMT (Updated: 4 Jan 2020 7:25 PM GMT)

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணியில் காங்கிரசார் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

கருங்கல்,

1-1-20 அன்று 18 வயது நிறைவடைந்தவர்கள் மற்றும் விடுபட்டவர்கள் தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க சிறப்பு முகாம் 4-ந்தேதி (நேற்று), 5-ந்தேதி (இன்று) மற்றும் 11 மற்றும் 12-ந்தேதிகளில் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதன்படி தமிழகத்தில் கடந்த மாதம் வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்களின் பெயர்களும், வாக்காளர் பட்டியலில் இதுவரை இடம் பெறாதவர்களின் பெயர்களையும், புதிதாக குடிபெயர்ந்து உள்ள வாக்காளர்களின் பெயர்கள், வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளதா? என்றும் ஆராய்ந்து, தகுதி வாய்ந்தவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணியில் குமரி மேற்கு மாவட்டத்துக்கு உள்பட்ட காங்கிரஸ் வட்டார, நகர, பேரூர், ஊராட்சி தலைவர்கள், கிளை அமைப்புகளின் நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட வேண்டும்.

விவரம்

மேலும் இந்த பணிகள் குறித்த விவரங்களை அந்தந்த வட்டார, நகர தலைவர்கள் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Next Story