மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பிளஸ்-1 மாணவன் சிகிச்சை பலனின்றி சாவு
சாலையின் குறுக்கே நாய் வந்ததால் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாகஇறந்தான். இந்த விபத்துகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
சூலூர்,
கோவை மாவட்டம்சூலூர்அடுத்தசெங்கத்துறைபகுதியை சேர்ந்தவர் குமரன். இவரது மகன்ரஞ்சித்குமார் (வயது 16). இவர்சூலூர்அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். அதே பகுதியில் வசிக்கும் அவரது நண்பர்களான சங்கர் மற்றும்பொன்ராஜ் ஆகியோருக்குபுத்தாண்டுவாழ்த்து சொல்லரஞ்சித்குமார்கடந்த 1-ந்தேதி, அவர்களதுவீட்டுக்கு சென்றுஉள்ளார்.
பின்னர் அவர்கள் 3 பேரும்,சங்கருக்கு சொந்தமானமோட்டார் சைக்கிளில்காடாம்பாடிக்கு சென்றுவிட்டு தங்களதுவீடுகளுக்கு சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது சாலையின் குறுக்கே நாய் வந்ததால் சங்கர் திடீரென்றுபிரேக்போட்டுள்ளார். இதில் 3 பேரும்நிலைத்தடுமாறிமோட்டார் சைக்கிளில்இருந்து கீழே விழுந்தனர். இந்த விபத்தில்ரஞ்சித்குமாருக்கு தலையில்பலத்த காயம் ஏற்பட்டது. மற்ற 2 பேரும் லேசான காயம் அடைந்தனர். இதையடுத்து,அப்பகுதிமக்கள்ரஞ்சித்குமாரை மீட்டுஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசுஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள்தீவிர சிகிச்சைஅளித்து வந்தனர்.
இந்தநிலையில்சிகிச்சை பலனின்றிரஞ்சித் குமார் நேற்று பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்துசூலூர்போலீசார்வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story