தக்கலை அருகே குளத்தில் மூழ்கி வாலிபர் சாவு


தக்கலை அருகே குளத்தில் மூழ்கி வாலிபர் சாவு
x
தினத்தந்தி 6 Jan 2020 4:15 AM IST (Updated: 6 Jan 2020 2:33 AM IST)
t-max-icont-min-icon

தக்கலை அருகே குளத்தில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

பத்மநாபபுரம்,

தக்கலை அருகே குமாரகோவில், இளங்கடைதெருவை சேர்ந்தவர் தாஸ். இவருைடய மகன் கண்ணன் (வயது 26), டிரைவர். இவர் நேற்று மாலையில் தனது நண்பர்களுடன் அந்த பகுதியில் உள்ள குளத்தில் குளிக்க சென்றார். அவர் தண்ணீரில் இறங்கி குளித்து கொண்டிருந்த போது, ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. எதிர்பாராத விதமாக கண்ணன் தண்ணீரில் மூழ்கினார்.

இதைப்பார்த்த அவரது நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் விரைந்து வந்து கண்ணனை மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

பரிதாப சாவு

ஆனால், செல்லும் வழியிேலயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பலியான கண்ணன் அடுத்த வாரம் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்ல தயாராகி வந்தார். இந்த நிலையில் அவர் குளத்தில் மூழ்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
1 More update

Next Story