ராணிப்பேட்டையில் பொங்கல் பரிசு தொகுப்பு - முகம்மதுஜான் எம்.பி. வழங்கினார்


ராணிப்பேட்டையில் பொங்கல் பரிசு தொகுப்பு - முகம்மதுஜான் எம்.பி. வழங்கினார்
x
தினத்தந்தி 9 Jan 2020 10:30 PM GMT (Updated: 2020-01-09T18:24:33+05:30)

ராணிப்பேட்டை பொங்கல் பரிசு தொகுப்பை முகம்மதுஜான் எம்.பி. வழங்கினார்.

சிப்காட் (ராணிப்பேட்டை), 

ராணிப்பேட்டையில் நகர கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் பெங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவரும், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளருமான பூங்காவனம் தலைமை தாங்கினார். ஒன்றிய பொருளாளரும், சங்கத்தின் துணை தலைவருமான பழனி முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக அ.தி.மு.க.வின் சிறுபான்மையினர் நல பிரிவு மாநில இணை செயலாளர் முகம்மத்ஜான் எம்.பி. கலந்துகொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கினார்.

நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை நகர செயலாளர் என்.கே.மணி, மாவட்ட ஜெயலலிதா பேரவை பொருளாளர் எஸ்.எம்.சுகுமார், மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் கே.பி.சந்தோ‌ஷம், நகர ஜெயலலிதா பேரவை துணைத்தலைவர் அசோகன், புளியங்கண்ணு கிளை செயலாளர் நாகேஷ் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

சோளிங்கர் மேற்கு ஒன்றியம், பொன்னை கூட்டுறவு கடன் சங்கத்திற்குட்பட்ட நியாய விலைக்கடையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேல்பாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவரும், சோளிங்கர் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளருமான சோமநாதபுரம் சின்னதுரை கலந்துகொண்டு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கினார்.

நிகழ்ச்சியில் பொன்னை கூட்டுறவு கடன் சங்க தலைவர் ரவி, செயலாளர் சேரலாதன் மற்றும் சங்க இயக்குனர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

சேவூர் ஊராட்சியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவர் ரவி தலைமை தாங்கி, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கினார். இதில் சங்க செயலாளர் அம்பிகா, சேவூர் ஊராட்சி அ.தி.மு.க. செயலாளர் சேவூர் ராஜேந்திரன், சங்க இயக்குனர்கள் வேலு, புவனேஸ்வரி, முன்னாள் இயக்குனர் அச்சுதானந்தம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

அம்மூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அம்மூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவர் ஏ.எம்.சண்முகம் தலைமை தாங்கினார். சங்கத்தின் துணைத்தலைவர் மனோகரன், சங்க செயலாளர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் முகம்மதுஜான் எம்.பி. கலந்துகொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கினார். இதில் சங்கத்தின் இயக்குனர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Next Story