ஓசூர் அருகே, வியாபாரியிடம் ரூ.9 லட்சம் மோசடி - 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு


ஓசூர் அருகே, வியாபாரியிடம் ரூ.9 லட்சம் மோசடி - 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 10 Jan 2020 4:00 AM IST (Updated: 10 Jan 2020 12:48 AM IST)
t-max-icont-min-icon

ஓசூர் அருகே வியாபாரியிடம் ரூ.9 லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஓசூர், 

புதுக்கோட்டை மாவட்டம் ராஜகோபாலபுரம் பெரியார் நகரை சேர்ந்தவர் சுரே‌‌ஷ்குமார் (வயது 45). தங்கநகை வியாபாரி. இவருக்கு சம்பத், பிரகா‌‌ஷ் என்ற 2 பேர் முகநூல் மூலமாக பழக்கம் ஆனார்கள். அவர்கள் 2 பேரும் தங்களிடம் தங்கம் குறைந்த விலைக்கு உள்ளதாக சுரே‌‌ஷ்குமாரிடம் கூறினார்கள்.

இதைத் தொடர்ந்து கடந்த 4-ந் தேதி அவர்கள் சுரே‌‌ஷ்குமாரை கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பேரிகை பக்கமாக வருமாறு அழைத்தனர். அதை நம்பிய சுரே‌‌ஷ்குமார் ரூ.7 லட்சத்து 80 ஆயிரத்துடன் அங்கு சென்றார்.

அப்போது அங்கிருந்த சம்பத், பிரகா‌‌ஷ் ஆகிய 2 பேரும் சுரே‌‌ஷ்குமார் கையில் வைத்திருந்த ரூ. 7 லட்சத்து 80 ஆயிரம், 2 செல்போன்கள், 5 பவுன் தங்க நகை ஆகியவற்றை பெற்றுக் கொண்டு இங்கேயே காத்திருங்கள் சிறிது நேரத்தில் வந்து விடுகிறோம் எனக்கூறிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். அவற்றின் மதிப்பு ரூ.9 லட்சம் ஆகும். இந்தநிலையில் நீண்ட நேரமாகியும் அவர்கள் 2 பேரும் வரவில்லை.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை சுரே‌‌ஷ்குமார் உணர்ந்தார். மேலும் அவர் இந்த மோசடி சம்பவம் குறித்து பேரிகை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story